வெயில் காலத்தில் இந்த உணவுகள் எல்லாம் சாப்பிடக்கூடாது!

0
149
#image_title

வெயில் காலத்தில் இந்த உணவுகள் எல்லாம் சாப்பிடக்கூடாது!

வெயில் காலம் என்று அழைக்கப்படும் கோடைக் காலத்தில் நாம் சாப்பிடக்கூடாத தவிர்க்க வேண்டிய சில உணவு வகைகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கோடை காலமான வெயில் காலம் தொடங்கிய நிலையில் அனைவரும் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் குளிர்ச்சியான பானங்களையும் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக் கூடிய குளிர்ச்சியான உணவுப் பொருட்களையும் நாம் வாங்கி உண்டு வருகின்றோம்.

ஒரு சிலர் கோடை காலமாக இருந்தாலும் குளிர் காலமாக இருந்தாலும் மழை காலமாக இருந்தாலும் நாவிற்கு சுவை அளிக்கக் கூடிய உணவுப் பொருட்களை வாங்கி உண்டு வருகின்றனர். அதனால் பருவ நிலை மாறும் பொழுது சில உடல் நலம் சார்ந்த பிரச்சனைகளையும் சந்தித்து வருகின்றனர்.

அந்தந்த பருவ காலத்திற்கு ஏற்ப உணவு வகைகளை சாப்பிட்டு வந்தால் உடல் நல குறைபாடுகள் எதுவும் இருக்காது. அந்த வகையில் இந்த பதிவில் வெயில் காலத்தில் நாம் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்…

* வெயில் காலத்தில் துரித உணவு வகைகளான பீட்சா, பர்கர் போன்ற உணவு வகைகளை சாப்பிடக்கூடாது.

* வெயில் காலம் தொடங்கி விட்டால் கோழி இறைச்சி, இறால், நண்டு போன்ற அசைவ உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இந்த வகை உணவுகள் உடல் சூட்டை அதிகரித்து விடும்.

* வெயில் காலத்தில் வெண்ணெய், பால் போன்ற பொருட்களை அளவோடு சாப்பிட்டால் நல்லது. அல்லது அதை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது. தயிர் உடலுக்கு குளிர்ச்சி தரும் என்பதால் அதை அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

* வெயில் காலங்களில் மைதா மாவில் செய்த உணவு வகைகள், கோதுமை மாவில் செய்த உணவு வகைகள் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது.

* வேர்கடலை உடலுக்கு பல ஊட்டச்சத்துக்களை தரும். இருந்தாலும் வெயில் காலத்தில் வேர்கடலையை சாப்பிடக் கூடாது.

* கத்தரிக்காய், கிழங்கு வகைகள் இவற்றை வெயில் காலங்களில் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.

* வெயில் காலங்களில் காபி, தேநீர் போன்ற பானங்களை குடிப்பதை தவிர்த்து விடுவது உடலுக்கு மிகவும் நல்லது.

* வெயில் காலம் தொடங்கி விட்டால் உப்பு, புளி, காரம் ஆகியவை அதிகம் உள்ள பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

* வெயில் காலங்களில்பச்சை மிளகாய், இஞ்சி, பட்டை, குறுமிளகு ஆகியவற்றை அளவாக எடுத்துக் கொள்ளை வேண்டும்.