சர்க்கரை நோயை விரட்டியடிக்கும் வேப்பம்பூ வடகம் – செய்வது எப்படி?
வேப்பம் பூ நம் உடலில் உள்ள கெட்ட கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டது. வேப்பம் பூவை சாப்பிட்டால், ஜீரணத்தை அதிகரிக்கும்.
வேப்பம் பூவில், குல்கந்து தயாரித்து சாப்பிடலாம். குல்கந்து செய்து சாப்பிட்டால் ஆண்மை சக்தி அதிகரிக்கும். கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி குணமாகும்.
சரி… வாங்க… வேப்பம்பூவை வைத்து எப்படி வடகம் செய்யலாம் என்று பார்ப்போம் –
தேவையான பொருட்கள்
காய வைத்த வேப்பம்பூ – 4 கப்
உளுந்து – 2 கப்
மிளகு – 2 தேக்கரண்டி
பெரிய சீரகம் – 2 மேசைக்கரண்டி
சிறிய சீரகம் – 2 மேசைக்கரண்டி
வெட்டிய வெங்காயம் – 1 கப்
கறிவேப்பிலை – 3 நெட்டு
மிளகாய் பிளேக்ஸ் – 4 மேசைக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
மிளகு, சீரகங்களை பொடித்து கொள்ள வேண்டும்.
உளுந்தை ஊற வைத்து கொர கொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதன் பிறகு, உரைத்த உளுந்தினுடன் காய்ந்த வேப்பம் பூ, மற்ற எல்லா பொருட்களையும் தண்ணீர் விடாது இறுக்கமாக குழைக்க வேண்டும்.
இதனையடுத்து, அதனை நெல்லிக்காயளவு உருண்டைகளாக உருட்டி சிறிது வடை போல தட்டையாக்கி சுத்தமான காய்ந்த ஒரு துணியில் அடுக்கி வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும்.