மெட்ரோ ரயில் சார்பில் புதிய அறிவிப்பு!! மினி பஸ் மற்றும் ஆட்டோ தொடக்கம்!!
தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில் திருமங்கலம் மெட்ரோ ரயில் சார்பில் மினி பஸ் மற்றும் ஆட்டோ தொடங்கப்பட்டது.இதற்கு கட்டணமாக ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.25 வசூலிக்கப்படுகின்றது.
சென்னையில் பொதுமக்கள் தங்கள் குடியிருப்பில் இருந்து மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து மெட்ரோ ரயில் நிலையம் வருவதற்கு பல்வேறு சேவைகள் தேவைப்படுகின்றது.
மேலும் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு செல்லவும் ஆட்டோ பஸ் போன்றவற்றின் தேவை அவசியமாகி இருக்கின்றது.
இந்தநிலையில் மெட்ரோ சார்பில் ரயில் மாநகர போக்குவரத்து கழகத்தின் இணைப்பில் பயணிகளுக்காக மினி பஸ் மற்றும் ஆட்டோ சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இது அனைத்தும் மெட்ரோ ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டே துவங்கப்பட்டுள்ளது.இவற்றை மெட்ரோ ரயில் இயக்குனர் ராஜெஷ் சதுர்வேதி துவங்கி வைத்தார்.
இவற்றின் மூலம் திருமங்கலம் ரயில் நிலையத்திற்கு வர இருக்கும் மெட்ரோ ரயில் பயணிகள் மிகவும் சுலபமாக கால தாமதமின்றி வர முடியும்.
மேலும் திருமங்கலம் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள இடங்களுக்கு பயணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சார்பில் தொடங்கப்பட்ட இந்த சேவையானது மாநகர போக்குவரத்து துறை உதவியுடன் தொடங்கப்பட்டது.இந்த சேவை திருமங்கலம் மற்றும் கொரட்டூர் வாட்டர் கேனல் சாலையில் இயக்கப்படுகின்றது.
மேலும் இதற்கான பயண கட்டணம் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.25 என்று வசுலிக்கப்படுகின்றது.இந்த சேவையின் மூலம் மெட்ரோ ரயில் நிலைய பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.இந்த திட்டம் பொதுமக்களின் சார்பில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.