அரசு பள்ளி மாணவிகளுக்கு புதிய வசதி! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தகவல்!
மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் ,சமூக நலன் போன்றவைகளின் அடிப்படையில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ 1000 உதவித்தொகை வழங்க புதுமைப் பெண் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மேலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரைபடிக்கும் குழந்தைகளுக்கு மத்திய உணவு.ஒரு ஆண்டுக்கு நான்கு ஜோடி சீருடைகள் ,11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி போன்றவைகள் வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த மனு நேற்று தலைமை நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் கூறியதாவது சமூக ஆர்வலர் கோரிய மனு முக்கியமான ஒன்றாக உள்ளது.
இதற்கு நீதிமன்றத்துக்கு மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உதவ வேண்டும் என கூறினார்கள்.இது தொடர்பாக பதில் மனுவை மத்திய அரசும் ,மாநில அரசுகளும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.அதற்காக சம்பந்த பட்ட அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பலாம் எனவும் தெரிவித்தனர்.