பைக் டாக்சியில் பயணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.. பெங்களூருவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

0
163

ராபிடோ ஓட்டுநர் மற்றும் அவரது நண்பரால் பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய பைக் டாக்ஸி நிறுவனமான ராபிடோ பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் வாடலை பைக் சர்வீஸ் பெறலாம். பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் இது போன்ற சர்வீஸுக்கு மக்களிடையே பெரிய வரவேற்பு உள்ளது. இந்நிலையில், ராபிடோ மூலம் பயணம் செய்த பெண்ணை அதன் ஓட்டுநர் மற்றும் நண்பர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ராபிடோவில் முன்பதிவு செய்திருந்தார்.அவர் பைக்கில் பயணம் செய்து கொண்டிருந்த போது பைக் டிரைவர் அவரின் நண்பருடன் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் குற்றவாளிகள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து ராபிடோ நிறுவனத்தில் இருந்து தெரிவிக்கும் போது, வாடிக்கையாளருக்கு நடந்த இந்த செயல் வன்மையான கண்டனத்துக்குரியது என தெரிவித்ததோடு பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுகொள்வதாக தெரிவித்துள்ளது. காவல்துறையினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது. பைக் டாக்ஸி நிறுவனம் பாதுகாப்பு என கருதப்பட்ட நிலையில், இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.