திமுக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்த கடும் கண்டனம்!
தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் திமுகவை கண்டித்து போராட்டம் செய்து வருகின்றார். இந்த போராட்டத்தின்போது பத்திரிகையாளர்களை சந்தித்து அவர் உரையாற்றினார். அப்போது திமுகவின் தேர்தல் அறிக்கையில் இருக்கின்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவது கானல் நீராகிவிடும் என்பதைப்போல தெரிகிறது. இதன் காரணமாக தான் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பாக போராட்டம் நடந்து வருகிறது. நான் சேலத்தில் என்னுடைய வீட்டின் முன்பு என்னுடைய கண்டன ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்திருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி … Read more