நித்திய கல்யாணி.. இது ஒரு அற்புத மருத்துவ குணம் கொண்ட மூலிகைப் பூ!!

0
219
#image_title

நித்திய கல்யாணி.. இது ஒரு அற்புத மருத்துவ குணம் கொண்ட மூலிகைப் பூ!!

தமிழகத்தில் அதிகமாக வளரக்கூடிய பூச்செடி வகைகளில் ஒன்று நித்திய கல்யாணி.இவை வெறும் அழகுச்செடி என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.ஆனால் இது ஒரு அற்புத மூலிகை செடி என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

இந்த நித்திய கல்யாணி பூவை சுடுகாட்டுப் பூ,கல்லறைப் பூ என்று கிராமப்பகுதிகளில் அழைப்பார்கள்.இந்த பூவில் மாட்டும் அல்ல தண்டு,இலை,வேர் என அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.இவை நமது உடலில் உள்ள பல்வேறு பாதிப்புகளுக்கு உரியத் தீர்வாக இருக்கிறது.

நித்திய கல்யாணி பூவின் அற்புத பயன்கள்:-

*நித்திய கல்யாணி பூவில் தேநீர் செய்து சாப்பிட்டு வந்தோம் என்றால் இரத்த அழுத்தம், பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் பாதிப்புகள் சரியாகும்.

*இந்த நித்திய கல்யாணி பூ சிறுநீர் சர்க்கரையைக் குறைக்க உதவுகிறது.

*இந்த பூவில் உள்ள வின்க்ரிஸ்டின்,வின்ப்ளாஸ்டின் புற்றுநோய்க்கு சிறந்த மருந்தாகும்.

*இரத்த அணுக்கள் குறைபாடு,வெள்ளை அணுக்களின் அதிகரிப்பால் ஏற்படும் இரத்தப் புற்றுநோயை உள்ளிட்ட பாதிப்புகளை சரி செய்ய இவை பெரிதும் உதவுகிறது.

*ஐந்து நித்தியகல்யாணி பூக்களை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் உடல் சோர்வு,அசதி ஆகியவை சரியாகும்.

*நீரிழிவு பாதிப்பு இருப்பவர்கள் நித்ய கல்யாணி பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஒரு நாளைக்கு 4 வேளை என்ற முறையில் குடித்து வருவதன் மூலம் நோய் பாதிப்பு கட்டுக்குள் இருக்கும்.