இனி பாஸ் பண்ணா தான் மருத்துவ பணி!!  வருகிறது NEXT தேர்வு… மாணவர்கள் அதிர்ச்சி!!

0
136
இனி பாஸ் பண்ணா தான் மருத்துவ பணி!!  வருகிறது NEXT தேர்வு... மாணவர்கள் அதிர்ச்சி!!
இனி பாஸ் பண்ணா தான் மருத்துவ பணி!!  வருகிறது NEXT தேர்வு... மாணவர்கள் அதிர்ச்சி!!

இனி பாஸ் பண்ணா தான் மருத்துவ பணி!!  வருகிறது NEXT தேர்வு… மாணவர்கள் அதிர்ச்சி!!

இனி மருத்துவராக பணி புரிய வேண்டுமென்றால் NEXT பாஸ் பண்ணால் மட்டுமே மருத்துவராக பணிபுரிய முடியும். எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கான நெக்ஸ்ட் தேர்வு இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப் போவதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த நெக்ஸ்ட் தேர்வானது இரண்டு நிலையாக நடத்த உள்ளது. ஐந்தரை ஆண்டுகள் கொண்ட மருத்துவ படிப்பில் முதல் நான்கரை ஆண்டுகள் முடித்த மாணவர்கள் NEXT -1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

இத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஓராண்டு பயிற்சி மருத்துவராக பணிபுரிய முடியும். அதன் பிறகு NEXT-2 நிலையில் தேர்ச்சி பெற்றால் தான் மருத்துவராக பணிபுரிய முடியும் என தேசிய மருத்துவ ஆணையம் ஆணையிட்டுள்ளது.

இந்த தேர்வு 2020 ஆம் ஆண்டு பேட்ச் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவ மாணவர்கள் இத்தேர்வில் தேர்வு பெற்றால் மட்டுமே மருத்துவர் பணியை செய்ய முடியும்.

இந்த நெக்ஸ்ட் தேர்வு நிலை-1 மற்றும் நிலை-2 என இரண்டு நிலைகளில் நடத்தப்படும். படிப்பில் சேர்ந்த 10 ஆண்டுகளுக்குள் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

NEXT இரு தேர்வுகளாக மே மற்றும் நவம்பர் மாதங்களில் நடக்க இருக்கிறது. வருகிற 28ஆம் தேதி நாடு முழுவதும் மாதிரி தேர்வு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பட்டம் பெற்றாலும் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பதிவு பெற்ற மருத்துவராக அங்கீகாரம் கிடைக்கப்பெறும் என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள மாணவர்கள், இந்த நெக்ஸ்ட் தேர்வை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இத்தேர்வை கைவிட வேண்டும் என ஏற்கனவே தமிழ்நாடு அரசு சார்பிலும் தமிழக  முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous article“திரெட்ஸ்” செயலி டிவிட்டரின் பிரதி!! மெட்டா மீது ட்விட்டர் நிறுவனம் குற்றச்சாட்டு!!
Next articleகாங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி மீதான வழக்கு! இன்று தீர்ப்பு வழங்கும் உச்சநீதி மன்றம்!!