உடல் பருமன்? அப்போ இந்த ட்ரிங்கை காலையில் 1 கிளாஸ் குடிங்க!! ஒரே வாரத்தில் 7 கிலோ குறைஞ்சிடுவீங்க!!

Photo of author

By Divya

உடல் பருமன்? அப்போ இந்த ட்ரிங்கை காலையில் 1 கிளாஸ் குடிங்க!! ஒரே வாரத்தில் 7 கிலோ குறைஞ்சிடுவீங்க!!

இன்றைய நவீன கால வாழ்க்கை முறையில் பெரும்பாலானோர் முறையற்ற உணவு முறையின் காரணமாக எடை அதிகரித்து காணப்படுகிறார்கள். வாய்க்கு ருசியை தேடும் நாம் உடல் ஆரோக்கியத்தை பற்றி பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. இதனால் பல வித நோய் பாதிப்புகளை விரைவில் சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம்.

உடல் எடை கூட என்ன காரணம்?

*ஹோட்டல் உணவை உட்கொள்வது

*அடிக்கடி இறைச்சி உணவை எடுத்துக் கொள்ளுதல்

*பொரித்த, வறுத்த உணவை உண்பது

*சரியான தூக்கம் இல்லாமை

*மன சோர்வு மற்றும் மன அழுத்தம்

*உடல் உழைப்பு இல்லாமை

*அளவுக்கு மீறி உணவு உண்பது

தேவையான பொருட்கள்:-

*கருஞ்சீரகம் – 2 தேக்கரண்டி

*வெந்தயம் – 2 தேக்கரண்டி

*எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி

*பட்டை – 2 துண்டு

*பிரியாணி இலை – 2

*கிராம்பு – 5

*தேன் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 2 தேக்கரண்டி கருஞ்சீரகம் போட்டு மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும். இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.

அடுத்து 2 தேக்கரண்டி வெந்தயம் மற்றும் 2 துண்டு பட்டையை வாணலியில் போட்டு வறுக்கவும்.
பின்னர் 2 பிரியாணி இலை மற்றும் 5 கிராம்பை சேர்த்து வறுக்கவும். பின்னர் அடுப்பை அணைத்து வறுத்த பொருட்களை நன்கு ஆற விடவும்.

பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து நன்கு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 டம்ளர் தண்ணீரை ஊற்றி சூடுபடுத்தவும். அடுத்து அரைத்த பொடி1 தேக்கரண்டி அளவு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

பின்னர் அடுப்பை அணைத்து அதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும். அடுத்து அதில் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் 1 தேக்கரண்டி தூயத் தேன் சேர்த்து நன்கு கலந்து காலையில் வெறும் வயிற்றில் பருகவும். இவ்வாறு தினமும் பருகி வந்தோம் என்றால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு அனைத்தும் கரைந்து உடல் பிட்டாக இருக்கும்.