அட நம்புங்க.. “இலவங்கம்”.. கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகளை அடித்துக் கொண்டு வெளியேற வைக்கும்!!

0
111
#image_title

அட நம்புங்க.. “இலவங்கம்”.. கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகளை அடித்துக் கொண்டு வெளியேற வைக்கும்!!

இலவங்கம் நம் உணவில் பயன்படுத்தும் மசாலா வகைகளில் ஒன்று. இது அதிக மணம் மற்றும் ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் பொருளாகும். இந்த இலவங்கம் உடலில் உள்ள முக்கிய உள்ளுறுப்பான கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

நமது கல்லீரல் தாதுக்கள் மற்றும் இரும்புச் சத்துக்களை சேமித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது. இந்த கல்லீரலில் நச்சுக்கள் தேங்கி கிடந்தால் அவை நம் உடல் ஆரோக்கியத்தை கெடுத்து விடும். எனவே கல்லீரலில் தேங்கி கிடக்கும் நச்சுக்கள் முழுவதும் வெளியேற கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் உரியத் தீர்வு கிடைக்கும்.

இலவங்கத்தில் அடங்கி இருக்கும் சத்துக்கள்:-

வைட்டமின் சி, நார்ச்சத்து, மெக்னீசியம், இரும்பு சத்து, பொட்டாசியம், சோடியம், கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*இலவங்கம்

*பட்டை

*இஞ்சி

*எலுமிச்சை சாறு

*வெல்லம்

செய்முறை:-

அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி 5 இலவங்கம், சிறு துண்டு பட்டை, இடித்த இஞ்சி சிறிதளவு சேர்த்துக் மிதமான தீயில் நன்கு கொத்திக விடவும்.

பின்னர் அடுப்பை அணைத்து இதை கிளாஸுக்கு வடிகட்டி 1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு வெல்லம் சேர்த்து நன்கு கலக்கி பருகவும்.