5 ஸ்டார் ஹோட்டல்களில் விற்பனை செய்யப்படும் பழைய சோறு!!! இதன் 5 முக்கியமான நன்மைகள் என்னென்ன!!?

0
104
#image_title

5 ஸ்டார் ஹோட்டல்களில் விற்பனை செய்யப்படும் பழைய சோறு!!! இதன் 5 முக்கியமான நன்மைகள் என்னென்ன!!?

நமக்கு பிடிக்காத உணவாக இருக்கும் பழைய சோறு நமது உடலுக்கு தரும் 5 முக்கியமான நன்மைகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பழைய சோறு என்பது ஏழைகளின் எளிமையான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவாக பார்க்கப்படுகின்றது. பெரும்பாலும் பழைய சோற்றை யாரும் விரும்பி சாப்பிடுவது கிடையாது. ஆனால் இதில் உள்ள நன்மைகள் மற்றும் சத்துக்களை அறிந்தவர்கள் ஒரு நாளுக்கு இரண்டு வேலைகள் பழைய சோற்றை உண்டு வருகிறார்கள்.

பழைய சோறு என்பது முந்தைய நாள் இரவில் சாப்பாட்டில் தண்ணீர் ஊற்றி தயிர் ஊற்றி வைத்துக் கொண்டு மறுநாள் காலையில் சாப்பிடுவது ஆகும். இவ்வாறு செய்வதால் இதில் ஏற்படும் நல்ல பாக்டீரியாக்கள் நம் உடலுக்கு பல நன்மைகளை தருகின்றது. பழைய சோற்றில் வைட்டமின் டி சத்துக்கள் அதிகளவில் உள்ளது. பழைய சாதத்தின் அளவை விட இதில் 21 மடங்கு அதிகம் இரும்புச் சத்துக்கள் உள்ளது.

தற்பொழுதைய காலத்தில் பழைய சோற்றில் இருக்கும் நன்மைகளை அறிந்த 5ஸ்டார் ஹோட்டல்கள் இதை ஐஸ் பிரியாணி என்ற பெயரில் விற்பனை செய்து வருகின்றது. மேலும் இந்த பழைய சோற்றை மண்பானைகளில் அடைத்தும் விற்பனை செய்து வருகின்றனர். இந்த பழைய சாதத்தை சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் 5 முக்கியமான நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பழைய சாதத்தை சாப்பிடுவதால் நமது உடலுக்கு கிடைக்கும் 5 முக்கியமான நன்மைகள்!!!

* நாம் பழைய சாதத்தை சாப்பிடுவதால் வயிற்றில் உள்ள புண்களை இனச் செய்து நமக்கு இருக்கும் அல்சரை குணப்படுத்துகின்றது.

* இந்த பழைய சாதமானது நம்முடைய குடலில் நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தியை ஊக்குவித்து அதிகரிக்கச் செய்கின்றது.

* இந்த பழைய சாதத்தை சாப்பிடுவதால் மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு போன்ற பிரச்சனைகளை சரி செய்கின்றது.

* நாம் என்றுமே இளமையாக இருக்க பழைய சாதத்தை சாப்பிடலாம். அதாவது பழைய சாதம் நமது சருமத்தை வயதான தோற்றத்தில் இருந்து இளமையான தோற்றத்திற்கு மாற்றி நம்மை பாதுகாக்கின்றது.

* இந்த பழைய சாதத்தை சாப்பிடுவதால் நம்முடைய எலும்புகள் வலிமை பெறுகின்றது. மேலும் எலும்பு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கப்படுகின்றது.

Previous articleகாலில் அடிக்கடி ஏற்படும் ஆணி!!! இதை சரி செய்வதற்கு இந்த 4 டிப்ஸ் பயன்படுத்துங்கள்!!!
Next articleதள்ளுவண்டி கடை ஸ்டைலில் சிக்கன் ரைஸ்!! இப்படி செய்தால் டேஸ்ட் அள்ளும்!! அட இத்தனை நாளா இது தெரியமா போச்சே!!