தள்ளுவண்டி கடை ஸ்டைலில் சிக்கன் ரைஸ்!! இப்படி செய்தால் டேஸ்ட் அள்ளும்!! அட இத்தனை நாளா இது தெரியமா போச்சே!!

0
28
#image_title

தள்ளுவண்டி கடை ஸ்டைலில் சிக்கன் ரைஸ்!! இப்படி செய்தால் டேஸ்ட் அள்ளும்!! அட இத்தனை நாளா இது தெரியமா போச்சே!!

நாம் விரும்பி உண்ணும் ஹோட்டல் உணவுகளில் ஒன்று சிக்கன் ரைஸ்.தள்ளுவண்டி கடைகளில் செய்யப்படும் சிக்கன் ரைஸின் டேஸ்ட் மிகவும் அருமையாக இருக்கும்.அதே சுவையில் வீட்டு செய்முறையில் சிக்கன் ரைஸ் எப்படி செய்வது என்பது குறித்த விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*சிக்கன் 65  – தேவையான அளவு

*வடித்த சாதம் – ஒரு கப்

*பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

*பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கியது)

*இஞ்சி பூண்டு விழுது – 1/4 தேக்கரண்டி

*கருவேப்பிலை – சிறிதளவு

*எண்ணெய் – 3 தேக்கரண்டி

*முட்டை – 2

*உப்பு – தேவையான அளவு

*மிளகு தூள் – 1 தேக்கரண்டி

*டொமேடோ சாஸ் – 1 தேக்கரண்டி

*சோயா சாஸ் – 1/2 தேக்கரண்டி

*கொத்தமல்லி இலை – சிறிதளவு

*குடை மிளகாய் – சிறிதளவு(பொடியாக நறுக்கியது)

*கேரட் – சிறிதளவு(பொடியாக நறுக்கியது)

*பீன்ஸ் – சிறிதளவு(பொடியாக நறுக்கியது)

*முட்டைகோஸ் – சிறிதளவு(பொடியாக நறுக்கியது)

செய்முறை:-

1.முதலில் அடுப்பில் கடாய் வைத்து அதில் அவற்றில் எண்ணெய் 3 தேக்கரண்டி ஊற்றவும்.அவை நன்கு சூடேறியதும் அதில் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம்,பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

2.பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள குடை மிளகாய்,கேரட்,பீன்ஸ்,முட்டைகோஸ் சேர்த்து வதக்கவும்.

3.பின்னர் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்.

4.பிறகு அதில் 2 முட்டை உடைத்து ஊற்றி மிதமான தீயில் 3 நிமிடங்கள் கிளறவும்.

5.பின்னர் செய்து வைத்துள்ள சிக்கன் 65 அதில் சேர்த்து கிளறவும்.

6.அதன் பின் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.பிறகு டொமேடோ சாஸ் 1 தேக்கரண்டி,சோயா சாஸ் 1/2 தேக்கரண்டி சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

7.வடித்த சாதம் 1 கப் மற்றும் மிளகு தூள் 1 தேக்கரண்டி சேர்த்து நன்கு கிளறவும்.இறுதியாக வாசனைக்காக சிறிதளவு கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.