கெட்ட கொழுப்பை வெளியேற்றி உடல் எடையை கிடுகிடுவென குறைக்கும் ஓமம் டீ!

0
102
#image_title

கெட்ட கொழுப்பை வெளியேற்றி உடல் எடையை கிடுகிடுவென குறைக்கும் ஓமம் டீ!

ஓமம் நன்மைகள்

நம் வீட்டு சமையலில் சுவைக்காக சேர்க்கப்படும் பொருள் ஓமம். நம் உணவில் ஓமத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் நம் உடலில் செரிமானப் பிரச்சினையை போக்கும்.

ஓமத்தில் தயாரிக்கப்படும் டீயை தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள தைமோல் என்ற ரசாயனம் இரைப்பையின் சுரப்பிற்கு உதவி செய்யும். மேலும், ஓமம் டீயை குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் உருவாவதை தடுக்கும். கெட்டக் கொழுப்பை உடலிலிலிருந்து வெளியேற்றி உடல் எடையை கணிசமாக குறைக்க உதவி செய்யும். மேலும், உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

இவ்வளவு நன்மை கொண்ட ஓமத்தில் எப்படி டீ செய்யலாம் என்று பார்ப்போம் –

தேவையான பொருட்கள்

ஓமம் – ½ ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
தண்ணீர் – 1 டம்ளர்

செய்முறை

ஓமம் மற்றும் சீரகத்தை சம அளவில் எடுத்து, முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
பின்னர், மறுநாள் காலையில் அந்த தண்ணீரை அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
கொதித்த நீரை வடிகட்டினால் ஓமம் டீ ரெடி.
இந்த டீயை தினமும் குடித்து வந்தால் உடல் எடை கிடுகிடுவென குறைய ஆரம்பிக்கும்.

Previous articleதிரும்ப திரும்ப சாப்பிட  தூண்டும் சுவையான சிவப்பு அவல் பாயாசம் – செய்வது எப்படி ?
Next articleபழுதடைந்த சிறுநீரகத்தை சுறு சுறுப்பாக வேலை செய்ய வைக்கும் வீட்டு வைத்தியம்!!