இவரை அவுட்டாக எனக்கு ஒருபந்து போதும்

0
223
கிரிக்கெட்டில் பொதுவாக பந்துவீச்சாளர்கள் பேட்ஸ்மேனை விக்கெட் எடுத்தால் விதவிதமாக  செலபிரேசன் செய்வது வழக்கத்தில் உண்டு. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமான முறையில் செலபிரேசன் செய்வார்கள். அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேஸ்ரிக் வில்லியம்ஸ் நோட்புக் குறிப்பதை போல செய்வார். ஏற்கனவே ஒருமுறை விராட் கோலியை ஆட்டமிழக்கச் செய்ததும் இந்த செலபிரேசன்’ செய்தார். ஆனால் விராட் கோலி தனது பதிலை உடனே ஆட்டத்தின் மூலம் காட்டி விடுவார்.
கேஸ்ரிக் வில்லியம்ஸ் பந்தில் சிக்சர் அடித்ததும், அவரைப் போன்று விராட் கோலி செய்து பதிலடி கொடுத்தார். இந்தத் தொடர் முழுவதும் இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது. அதேபோன்று ஒரு போட்டி எற்பட்டால் விராட் கோலியை அவுட்டாக்க ஒரு பந்து போதும் என்று கேஸ்ரிக் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். விராட் கோலி ஆக்ரோசனமான வீரர். இதனால் அவரைப் போன்ற பேட்ஸ்மேன்களை எதிர்த்து விளையாடுவது விரும்புவேன் என்று கூறினார்.

Previous articleகோவில்களில் இனி இதற்கு தடை:! அறநிலையத்துறை அதிகாரி அதிரடி தகவல்!
Next articleஇளம் பாடகியுடன் மீண்டும் காதல் வயப்பட்ட அனிருத்! இந்த முறையாவது ஜெயிப்பாரா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here