கோவில்களில் இனி இதற்கு தடை:! அறநிலையத்துறை அதிகாரி அதிரடி தகவல்!

0
67

கோவில்களில் இனி இதற்கு தடை:! அறநிலையத்துறை அதிகாரி அதிரடி தகவல்!

 

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து வழிபாட்டுத்தளங்கள் உட்பட அனைத்தும் முடக்கப்பட்டிருந்தது.
ஊரடங்கின் ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது.தற்போது எட்டாம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில்,மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு பொது போக்குவரத்து இயக்கம் வழிபாட்டு தளங்கள் திறப்பு போன்ற பல்வேறு தளர்வுகளை அளித்துள்ளது.

தமிழக அரசின் உத்தரவுப்படி கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தளங்களும் திறக்கப்பட்டது.இந்நிலையில் நோய் பரவுதலை தடுக்கும் வகையில் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் ஒரு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

அதில் அவர்கள் கூறியதாவது,தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் சுமார் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளன.இவற்றின் பல்வேறு கோயில்களில் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். கொரோனாத் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், கோயில்களில் திருமணம் நடத்த அனுமதி இல்லை என்று கூறியுள்ளது.

மேலும் இது தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,கோயில்களில் தரிசனத்திற்கு மட்டுமே தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருமணத்திற்கு அனுமதி அளித்தால் கூட்டம் கூடும் என்றும், இதனால் நோய் பரவும் அபாயம் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.மேலும் கோவிலுக்குள் ஒரே ஒரு திருமணத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கலாம் என்று கேட்டபொழுது,ஒரே ஒரு திருமணத்திற்கு மட்டும் அனுமதி அளித்து,
மற்றவர்களுக்கு
அனுமதி மறுத்தால் சிக்கல்கள் ஏற்படும் என்று கூறிய அறநிலை துறை அதிகாரி,தற்போது கோயில்களில் திருமணம் நடத்த அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும், கொரோனா சூழல் திரும்பினால் தான் கோயில்களில் திருமணம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

 

author avatar
Pavithra