ஒரு இரவு போதும் மொத்த கரப்பான் பூச்சிகளையும் ஒழிக்க!! இனி ஜென்மத்துக்கும் இந்த பிரச்சனை இருக்காது!! 100% தீர்வு உண்டு ட்ரை பண்ணி பாருங்க!!

Photo of author

By Divya

ஒரு இரவு போதும் மொத்த கரப்பான் பூச்சிகளையும் ஒழிக்க!! இனி ஜென்மத்துக்கும் இந்த பிரச்சனை இருக்காது!! 100% தீர்வு உண்டு ட்ரை பண்ணி பாருங்க!!

பெரும்பாலானோர் வீடுகளில் கரப்பான் பூச்சி தொல்லை அதிகளவில் இருக்கிறது.இந்த கரப்பான் பூச்சிகள் முக்கியமாக சமையலறை,பாத்ரூம் உள்ளிட்ட இடங்களில் தான் குடி கொண்டிருக்கும்.இந்த கரப்பான் பூச்சி பிரச்சனையை ஆரம்ப நிலையிலேயே சரி செய்வது முக்கியம்.

தீர்வு 1:

தேவையான பொருட்கள்:-

*சமையல் சோடா – 2 தேக்கரண்டி

*தண்ணீர் – 1 கிளாஸ்

*சர்க்கரை – 1 1/2 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் ஒரு பவுல் எடுத்து அதில் 2 தேகேரண்டி சமையல் சோடா சேர்த்துக் கொள்ளவும்.பின்னர் அதில் 1 1/2 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.அடுத்து 1 கிளாஸ் தண்ணீர் எடுத்து அதில் ஊற்றி நன்கு கலக்கி கொள்ளவும்.

இதை ஓரு ஸ்பிரேயர் பாட்டிலில் ஊற்றி கரப்பான் பூச்சி நடமாட்டம் அதிகம் காணப்படும் இடங்களில் தெளித்து விடவும்.இவ்வாறு செய்வதன் மூலம் கரப்பான் பூச்சி செத்து மடிந்து விடும்.

தீர்வு 2:

தேவையான பொருட்கள்:-

*மண்ணெண்ணெய் – தேவையான அளவு

*ஸ்ப்ரே பாட்டில் -1

செய்முறை:-

முதலில் ஒரு ஸ்ப்ரே பாட்டில் எடுத்து அதில் தேவையான அளவு மண்ணெண்ணெய் நிரப்பி கொள்ளவும்.

பின்னர் வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை இருக்கும் இடத்தில் ஸ்ப்ரே பண்ணி விடவும்.இவ்வாறு செய்வதன் மூலம் மண்ணெண்ணெய் வாசத்திற்கு கரப்பான் பூச்சிகள் வீட்டை விட்டு வெளியேறி விடும்.

தீர்வு 3:

தேவையான பொருட்கள்:-

*எலுமிச்சம் பழம் – 1

*சர்க்கரை – 1 தேக்கரண்டி

*ஷாம்பு – 1 தேக்கரண்டி

செய்முறை:-

1.முதலில் ஒரு பவுல் எடுத்து அதில் 1 முழு எலுமிச்சை பழ சாற்றை பிழிந்து கொள்ள வேண்டும்.

2.பிறகு அதில் 1 தேக்கரண்டி அளவு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும்.

3.நம் தலைக்கு பயனப்டுத்தும் ஷாம்புகளில் ஏதேனும் ஒரு வகையில் இருந்து 1 தேக்கரண்டி அளவு எடுத்து அந்த பவுலில் சேர்க்கவும்.

4.அதன் பிறகு ஒரு ஸ்பூன் சர்க்கரை எடுத்து அதில் சேர்த்து கலக்கி கொள்ளவும்.

5.கலக்கி வைத்துள்ள கலவையை ஒரு ஸ்பிரேயர் பாட்டிலில் சேர்த்து வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை இருக்கும் இடங்களில் தெளித்தால் அவை மீண்டும் வீட்டு பக்கமே வராது.