மூட்டு வலி மற்றும் வீக்கம் குறைய மஞ்சள் ஒன்று போதும்!! 100% தீர்வு தரும் பாட்டி வைத்தியம்!!

0
32
#image_title

மூட்டு வலி மற்றும் வீக்கம் குறைய மஞ்சள் ஒன்று போதும்!! 100% தீர்வு தரும் பாட்டி வைத்தியம்!!

இன்றைய காலத்தில் பெரியவர்கள் முதல் இளம் வயது ஆட்கள் வரை அனைவரும் சந்தித்து வரும் ஒரு பெரும் பாதிப்பு மூட்டு வலி. இந்த வலி மூட்டு எலும்பை சுற்றி இருக்கும் பகுதியில் உள்ள ஜவ்வு தேய்மானம் மற்றும் எலும்பு தேய்மானம் உள்ளிட்டவைகளால் ஏற்படுகிறது. உடலில் உள்ள எலும்புகள் வலுப்பெற ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது அவசியம்.

ஆனால் நாம் சத்துக்கள் அற்ற உணவுகளை உண்டு வருவதால் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்திகள் குறைவதோடு எலும்பு தேய்மானம், மூட்டு வலி உள்ளிட்ட பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இதனால் எளிதான வேலைகளை கூட செய்ய முடியாத நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுகிறோம். இதற்கு இயற்கை வழிகளில் தீர்வு காண்பது நல்லது.

தீர்வு 1:

தேவையான பொருட்கள்:-

*மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

*தண்ணீர் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு பவுலில் ஒரு தேக்கரண்டி அளவு சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்.

பின்னர் அதில் 1 தேக்கரண்டி தண்ணீர் ஊற்றி நன்கு குழப்பிக் கொள்ளவும். இந்த பேஸ்டை மூட்டுகளின் மேல் பயன்படுத்துவதற்கு முன் வெந்நீரில் காட்டன் துணியை நினைத்து பிழிந்து கொள்ளவும். பின்னர் இதை மூட்டுகளின் மேல் வைத்து மெதுவாக அழுத்தம் கொடுக்கவும்.

பின்னர் தயார் செய்து வைத்துள்ள மஞ்சள் பேஸ்டை மூட்டுகளின் மேல் தடவிக் கொள்ளவும். இந்த ரெமிடியை இரவில் பயன்படுத்துவதன் மூலம் மூட்டு வலி மற்றும் வீக்கம் சில நாட்களில் சரியாகி விடும்.