அண்ணாமலைக்கு தொடரும் சிக்கல்.. ஜூன் 4 யில் மாறப்போகும் பதவி!! கடும் கோவத்தில் பாஜக மேலிடம்!!  

0
883
Problem for Annamalai post
Problem for Annamalai post

அண்ணாமலைக்கு தொடரும் சிக்கல்.. ஜூன் 4 யில் மாறப்போகும் பதவி!! கடும் கோவத்தில் பாஜக மேலிடம்!!

நாடாளுமன்ற தேர்தலானது தமிழ்நாடு உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் முதற்கட்டமாக நடைபெற்றது. குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த தேர்தல் முடிவுகள் பெருமளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் பாஜகவின் பங்கானது சற்று அதிகமாகவே இருக்கும். ஆனால் இம்முறை எதிர்க்கட்சி கூட்டணியும் இல்லை என்பதால் தனித்து நிற்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டது. இதற்கு காரணம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

மேலிடம் அதிக அழுத்தம் கொடுத்தும் மீண்டும் அதிமுக -வுடன் கைகோர்க்க முடியவில்லை. இந்த கூட்டணி கலைந்ததின் முக்கிய பங்கு அண்ணாமலை தான் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லாததால், அவருக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் குறைந்துள்ளது என்பது அப்பட்டமாகவே தெரிகிறது. அந்த வகையில் இந்த நாடாளுமன்ற தேர்தலில் மேலிடத்திலிருந்து தேர்தலுக்காக அனுப்பப்பட்ட பணமும் ஆங்காங்கே சுரண்டப்பட்டதால் மேற்கொண்டு இவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

அந்த வகையில் மத்திய மந்திரி அமித்ஷா அவர்கள் மேலிடத்தில் வழங்கப்பட்ட பணம் தேர்தலுக்காக செலவிடப்படாதது குறித்து பல கேள்விகளை அண்ணாமலை நோக்கி வைத்துள்ளார். ஆனால் இந்த தேர்தல் முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். எதிர்பார்த்த அளவிற்கு தேர்தல் முடிவு தமிழகத்திற்கு கிடைக்கவில்லை என்றால் அண்ணாமலை பதவி நீக்கம் செய்யப்படலாம் என்றும் கூறுகின்றனர். குறிப்பாக மேலிடத்திலிருந்து வழங்கப்பட்ட பணத்தை மாவட்ட செயலாளர்கள் என தொடங்கி கீழுள்ள நிர்வாகிகள் வரை பாதி பாதியாக பிரித்து சுரண்டியுள்ளனர்.

இது குறித்த புகாரானது தொடர்ச்சியாக அமித்ஷாவிற்கு சென்றுள்ளது. இது குறித்து கேட்கையில், பாஜக தமிழகத்தில் வெற்றி காணாததால் பணம் என்பது எந்த நிர்வாகிகளிடமும் இல்லை. இதனால் அரசியலுக்காக பலரும் கடன் வாங்க நேரிட்டது. தற்பொழுது மேலிடம் கொடுத்த பணம் சரியாகி போய்விட்டதாக விளக்கம் அளித்த்துள்ளனர்.

இவ்வாறு புகார்கள் வந்த பொழுதும் அண்ணாமலை கண்டுகொள்ளாமல் இருப்பதால் அவரும் பெரிய அளவில் பணத்தை சுரண்டி உள்ளதாக கூறுகின்றனர். இதன்  அனைத்திற்கும் முடிவாக ஜூலை 4 இருக்கும் என்றும், கட்டாயம் அண்ணாமலையை  பதவி நீக்கம் செய்ய மேலிடம் சற்றும் தயங்காது என பல தகவல்கள் வெளிவந்துள்ளது.