தினமும் இதை குழந்தைகளுக்கு கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்!! மூளை புத்துணர்ச்சி பெறும்!!

தினமும் இதை குழந்தைகளுக்கு கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்!! மூளை புத்துணர்ச்சி பெறும்!!

பழத்தின் சாறு எடுத்து அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரிக்கும். மேலும், உடலும் மிகவும் பலம் அடையும். நரம்புகள் பலம் பெறும். தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதன் மூலமாக உடலிலுள்ள தேவையற்ற அசுத்த நீர் வியர்வையிலும், சிறுநீரிலும் வெளியேறும்.

இதன் காரணமாக சருமம் பளபளப்புடன் இருக்கும். நோய்கள் இன்றி பாதுகாப்பாக இருக்கலாம். உடலில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்கும். மேலும் தலை முடி உதிர்வதை தடுக்கும். குழந்தைகளின் வளர்ச்சி சீராகவும், ஆரோக்கியமாகவும் இருக்க ஆரஞ்சு மிகவும் உதவுகிறது.

இந்த பழத்தை குழந்தைகளுக்கு நேரடியாகவோ அல்லது சாறு எடுத்தோ கொடுத்து வந்தால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும், இதனால் குழந்தைகள் எப்போதும் சுறுசுறுப்புடனும் நோயின் தாக்குதலில் இன்றி ஆரோக்கியமாகவும் இருக்கும்.

அதனை தொடர்ந்து மாதவிலக்குக் காலங்களில் அதிக உதிரப் போக்கால் சிலர் சோர்ந்து காணப்படுவார்கள். இதன் காரணமாக அதிக மன உளைச்சல் மற்றும் எரிச்சல் ஏற்படும். இவர்கள் ஆரஞ்சு பழச் சாற்றில் காய்ச்சிய பால் அல்லது தேன் கலந்து அருந்தி வந்தால் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறலாம்.

மேலும் ஆரஞ்சு தினமும் உண்பதால் முகத்தில் அழகு கூடும். அதிக தாகத்தைத் தணிக்கும். வாய் துர்நாற்றத்தையும் போக்கும். உடல் வறட்சியை நீக்கும். உடல் சூட்டைத் தணிக்கும். மயக்கம் வரும் நேரத்தில் ஆரஞ்சு பழம் சாப்பிட்டால், தலைசுற்றல் உடனே நிற்கும். மேலும் ஆரஞ்சு பழத்தின் தோலை உலர்த்தி ஓமம், இந்துப்பு மற்றும் சுக்கு சேர்த்து இடித்து பொடியாக்கி தினமும் அதில் பல் தேய்த்து வந்தால் பற்கள் பளிச்சென்று இருக்கும்.

குழந்தைகளுக்கு பொதுவாக தினமும் இதனை கொடுத்து வந்தால் மூளை புத்துணர்ச்சியுடன் செயல்படும். மேலும், ஞாபக சக்தி அதிகரிக்கும்.இதனுடன் சிறுது பால் கலந்து தினமும் கொடுக்க குழந்தை ஆரோக்கியத்துடன் வளரும்.

Leave a Comment