ஆட்சிக்கு வந்த முதல் வேலையாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரின் தலையில் கைவைத்த திமுக அரசு! நடுநடுங்கும் அதிமுக!

0
62

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அவர்களின் இல்லத்தில் நேற்றையதினம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் திடீரென்று நடத்திய சோதனையில் 25.56 லட்சம் பணம் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.2016 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையில் தமிழகத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம் ஆர் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாகவும், போக்குவரத்து துறையில் அனேக ஊழல்களை செய்திருப்பதாகவும், குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்த சூழ்நிலையில், அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு நேற்றைய தினம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை செய்தார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் நேற்றைய தினம் முதல் நடவடிக்கையாக எம் ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை குறித்து ஆளும் கட்சி தரப்பில் தெரிவிக்கப்படும் போது நோய்த்தொற்று கட்டுக்குள் வந்து இருக்கின்ற சூழலில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீதான பார்வையை திமுக அரசு வீசத் தொடங்கி இருக்கிறது. அடுத்த படியாக முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு சொந்தமான பகுதிகளில் சோதனை நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், எம்ஆர் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 25.56 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பு ஒன்றில் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய மனைவி விஜயலட்சுமி அதோடு அவருடைய சகோதரர் சேகர் உள்ளிட்டோர் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வந்தது என்று தெரிவித்து இருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் 21ஆம் தேதி கரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறையினர் எம்ஆர் விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்கள்.நேற்றைய தினம் விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய உறவினர்கள் அதோடு அவருக்கு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் இன்று சென்னையில் இருக்கின்ற இல்லங்கள் அனைத்திலும் மற்றும் தமிழகம் முழுவதும் 26 பகுதிகளில் மாலை வரையில் சோதனை செய்யப்பட்டது என்று தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத 25 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் நிறுவனங்களில் செய்யப்பட்ட பரிவர்த்தனை குறித்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.