பகீர் தகவல்!!கோதுமை உப்புமாவில் துண்டு துண்டாக கிடந்த பல்லி? மயங்கி விழுந்த பள்ளி மாணவிகள்!.நடந்தது என்ன?
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றார்கள்.இந்தப் பள்ளியில் மாணவிகள் தங்கி படிப்பதற்காக விடுதி ஒன்றுள்ளது.
இந்த விடுதியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் அப்பள்ளி விடுதிலேயே தங்கி படித்து வருகின்றனர். இவ்விடுதியில் 190 மாணவிகள் தங்கி படித்து வருவதாக கூறுகின்றனர். இந்நிலையில் இன்று காலை விடுதியில் உணவு சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு திடீரென்று வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக தகவல் தெரிய வந்தது.
உடனடியாக மாணவிகளை மீட்டு வேதாரணியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த தகவலை அறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்விசாரணை விடுதியில் கோதுமை உப்புமாவில் துண்டு துண்டாக பல்லி இருந்ததாக மாணவிகள் புகார் அளித்தனர். இச்சம்பவம் மாணவிகளின் பெற்றோர்கள் கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.