கேல் ரத்னா விருதை வழங்க தங்கம் வென்ற தமிழக வீரர்க்கும் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர்க்கும் பரிந்துரை!

0
64

கேல் ரத்னா விருதை வழங்க தங்கம் வென்ற தமிழக வீரர்க்கும் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர்க்கும் பரிந்துரை!

பிரேசிலின், 2016 ஆம் ஆண்டு ரியோ நகரில் நடைபெற்ற பாராஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை வென்று இந்திய வீரர்கள் சாதனை படைத்தனர்.
ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் 1.89 மீட்டர் உயரத்தை தாண்டி சாதனை செய்து தங்கம் வென்றார்.
மாரியப்பன் தங்கவேலு சேலம் மாவட்டத்தில் உள்ள தீவட்டிப்பட்டி அடுத்த பெரியவடகம்பட்டி என்ற சிறிய ஊரை சேர்ந்தவர் இவரது பெற்றோர்கள் தங்கவேலு- சரோஜா ஆகியோர் செங்கல் சூளை மற்றும் காய்கறி வியாபாரம் நடத்தி வந்த ஏழை குடும்பத்தினர். தனது 21-வது வயதில் பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றார்.

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவிற்க்கு கேல் ரத்னா விருதை வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவுக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை செய்யபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.