பாட்டி வைத்தியம்.. எப்பேர்ப்பட்ட மூட்டு வலியும் நொடியில் பறந்து விடும்..!! உடனே ட்ரை பண்ணுங்க..!!
நவீன காலத்தில் உடல் ஆரோக்கியத்தை பேணிக்காப்பது முக்கியமாகும். அதற்கு ஆரோக்கியமான உணவு முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஆனால் பெரும்பாலானோர் அதை முறையாக பின்பற்றாததால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, உடல் பருமன், மூட்டு வலி உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.
பெரியவர்கள் மட்டும் சந்தித்து வந்த மூட்டு வலி தற்பொழுது இளம் வயதினரையும் பாதிக்கும் ஒன்றாக மாறிவிட்டது. இதற்கு கால்சியம் குறைபாடு, மூட்டு தேய்மானம், மூட்டுகளில் அடிபடுதல் உள்ளிட்டவைகள் காரணங்களாக சொல்லப்படுகிறது.
இந்த பாதிப்பை ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து குணப்படுத்திக் கொள்வது முக்கியம் ஆகும்.
தேவையான பொருட்கள்:-
*கொள்ளு பருப்பு
*பிரண்டை
*வெந்தயம்
*சீரகம்
செய்முறை…
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் தேவையான அளவு எடுத்து வெயிலில் உலர்த்தி கொள்ளவும். பின்னர் இதை ஒரு வாணலியில் சேர்த்து கருகிடாமல் வறுத்துக் கொள்ளவும்.
இவற்றை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பொடித்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.
பிறகு அதில் வறுத்து பொடி செய்து வைத்திருக்கும் கொள்ளு கலவையை அதில் சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். பின்னர் இதை ஒரு டம்ளருக்கு மாற்றி பருகவும். இவ்வாறு தொடர்ந்து பருகி வருவதன் மூலம் நாள்பட்ட மூட்டு வலியை குணமாக்கி கொள்ள முடியும். அதனோடு உடல் பருமனை குறைக்கவும் இந்த கொள்ளு பானம் உதவும்.