சர்க்கரை நோய் இருபவர்கள் இந்த ஒரு டீ மட்டும் செய்து பருகுங்கள் போதும்!!

Photo of author

By Divya

சர்க்கரை நோய் இருபவர்கள் இந்த ஒரு டீ மட்டும் செய்து பருகுங்கள் போதும்!!

Divya

சர்க்கரை நோய் இருபவர்கள் இந்த ஒரு டீ மட்டும் செய்து பருகுங்கள் போதும்!!

இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு எளிதில் ஏற்பட்டு விடுகிறது.பிறந்த குழந்தைகளுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது என்பது தான் வேதனைகளின் உச்சம்.காரணம் உணவு முறை மாற்றம்.ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை,பரம்பரை வியாதி என்று சர்க்கரை நோய் உருவாகிறது.சர்க்கரை நோய் இருப்பவர்கள் உணவு கட்டுப்பாட்டை தீவிரமாக கடைபிடிப்பது அவசியம்.இனிப்பு பண்டங்கள் பழக்கம் தலை வைத்து கூட படுத்து விடக்கூடாது.

அதோடு ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வது அவசியம்.இதற்காக நாம் அதிகளவு மாத்திரைகளை உண்டு வருகிறோம்.இதனால் உடல் இன்னும் அதிகமாகத்தான் பாதிக்கப்படும்.மாத்திரையே உணவு என்ற நிலை உருவாகி விடும்.இதனால் சில இயற்கை வழிகளை பின்பற்றினாலும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

தேவையான பொருட்கள்:-

*வெந்தயம் – 1 தேக்கரண்டி

*சீரகம் – 1 தேக்கரண்டி

*இஞ்சி – சிறு துண்டு

*பட்டை – 1 துண்டு

*கருவேப்பிலை இலை – 5

செய்முறை:-

1.அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.

2.அதில் வெந்தயம் 1 தேக்கரண்டி மற்றும் சீரகம் 1 தேக்கரண்டி சேர்த்து கொதிக்க விடவும்.

3.இவை கொதிக்கும் நேரத்தில் அதில் சிறு துண்டு இஞ்சி எடுத்து தட்டி போடவும்.

4.அதனோடு 3 முதல் 5 முதல் கருவேப்பிலை இலைகளை போட்டு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

5.அதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி பருகவும்.இவ்வாறு செய்வதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.