“மிளகு + வெற்றிலை” போதும்.. 5 வித பாதிப்புகள் குணமாகிவிடும்!!
மிளகு மற்றும் வெற்றிலை சிறந்த மூலிகை பொருட்கள் ஆகும். இவை இரண்டையும் இடித்து கசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் சளி, வறட்டு இருமல், அலர்ஜியால் ஏற்படும் மூக்கடைப்பு, தும்மல், நீரேற்றம், தோல் அரிப்பு, நெஞ்சு சளி அடைபு, ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்புகள் சரியாகும்.
மிளகில் உள்ள பைப்பரின், பைப்பரிடின் என்கின்ற வேதிப்பொருள் இருக்கிறது. இவை உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு ஆற்றலை ஊக்குவிக்க பெரிதும் உதவுகிறது.
தேவையான பொருட்கள்:-
*வெற்றிலை
*மிளகு
*தண்ணீர்
செய்முறை…
ஒரு உரலில் 10 மிளகு சேர்த்து இடித்து எடுத்துக் கொள்ளவும். அடுத்து 2 வெற்றிலையை உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் இடித்த மிளகு மற்றும் வெற்றிலையை சேர்த்து மிதமான தீயில் நன்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைத்துக் கொள்ளவும்.
பின்னர் இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் பருகவும். இவ்வாறு செய்தால் சளி, காய்ச்சல், அலர்ஜி, ஆஸ்துமா, நெஞ்சு சளி அடைப்பு அனைத்தும் சரியாகும்.