பெரம்பலூர்: கல்குவாரி டெண்டர் யாருக்கு என்பதில் போட்டி!! கலெக்டர் ஆபிசில் ரகளையில் ஈடுபட்ட போக்குவரத்து துறை அமைச்சரின் ஆதரவாளர்கள்!!

0
40
#image_title

பெரம்பலூர்: கல்குவாரி டெண்டர் யாருக்கு என்பதில் போட்டி!! கலெக்டர் ஆபிசில் ரகளையில் ஈடுபட்ட போக்குவரத்து துறை அமைச்சரின் ஆதரவாளர்கள்!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 31 கல்குவாரி நடத்துவதற்கு டெண்டர் விடப்பட்டு இருந்தது. இந்த டெண்டருக்கு விண்ணப்பம் செய்ய நேற்று அதாவது அக்டோபர் 30 இறுதி நாள் என்பதால் கலக்டெர் ஆபிஸில் விண்ணப்பம் செய்ய ஏரளாமானோர் குவிந்தனர்.

இந்நிலையில் டெண்டருக்கு விண்ணப்பம் செய்வதில் திமுக – பாஜகவிடையே வாக்கு வாதம் ஏற்படத் தொடங்கியது. பாஜகவை சேர்ந்த கல்குவாரி விண்ணப்பதாரர்களை விண்ணப்பம் செய்ய விடாமல் திமுக தரப்பினர் தடுத்து ரகளையில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

திமுகவை தவிர்த்து வேற எந்த ஒரு கட்சியும் கல்குவாரி டெண்டருக்கு விண்ணப்பம் செய்யக்கூடாது என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரின் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்தனர்.

இதனால் அங்கு வாக்கு வாதம் முற்றி கைகலப்பாக மாறத் தொடங்கியது. இவர்களின் அடாவடியால் கலக்டெர் ஆபிஸில் பெரும் பதற்றம் ஏற்படத் தொடங்கியது. அமைச்சரின் ஆதரவாளர்கள் பிற கட்சியை சேர்ந்தவர்களை கடும் சொற்களால் திட்டி பிரச்சனையில் ஈடுபடுவதை பார்த்த கலக்டெர் கற்பகம் மோதல் போக்கில் ஈடுபட்ட அனைவரையும் கண்டித்து இருக்கிறார்.

ஆனால் அவரின் பேச்சை கேட்காமல் திமுகவுக்கு தான் 31 டெண்டரையும் வழங்க வேண்டும். வேறு யாருடைய விண்ணப்பத்தையும் பெறக் கூடாது என்று அங்கிருந்த கோப்புகளை கிழித்து, நாற்காலியை உடைத்து மீண்டும் அடாவடி செயலில் அமைச்சரின் ஆதரவாளர்கள் ஈடுபட்டதால் கல்குவாரிக்கான டெண்டர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்து அதிரடி காட்டினார்.

இதனை தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த கல்குவாரிக்கான டெண்டரை அமைச்சரின் ஆதரவாளர்களின் அடாவடி செயலால் மீண்டும் ஒத்தி வைத்தார். இந்நிலையில் பிற கட்சியினரை விண்ணப்பம் செய்ய விடாமல் தடுத்து ரகளையில் ஈடுபட்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரின் ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் அங்கு சற்று பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.