மின் கட்டணம் கட்டவில்லை என்று வரும் எஸ்.எம்.எஸ் லிங்க்! மின்சார வாரியம் வெளியிட்ட முக்கிய அறிக்கை!! 

0
34
#image_title
மின் கட்டணம் கட்டவில்லை என்று வரும் எஸ்.எம்.எஸ் லிங்க்! மின்சார வாரியம் வெளியிட்ட முக்கிய அறிக்கை!!
மின் கட்டணம் கட்டவில்லை என்று எதாவது குறுஞ்செய்திகளோ அல்லது ஜிமெயிலோ வந்தால் அதில் இருக்கும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என்று தமிழக மின்சார வாரியம் எச்சரிக்கை பதிவு ஒன்றை போஸ்ட் செய்துள்ளது.
தற்பொழுது வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். கவனம் சிதறினால் மரணம் என்பதை போல நாம் சற்று ஏமாந்துவிட்டால் நம்முடைய பணம் எல்லாம் திருடு போகும்.
அதாவது தற்பொழுது திருடர்கள் என்பவர்கள் நேரடியாக  வந்து கையில் இருக்கும் பணத்தையோ அல்லது நகையையோ திருடுவது கிடையாது. திருடுவதற்கு கூட நம்பத்தகுந்த வகையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணத்தை நம்மிடம் இருந்து நேரடியாக திருடுகிறார்கள்.
அந்த வகையில் வங்கி கணக்கை புதுப்பிப்பது, பார்ட் டைம் வேலைகள், லாட்டரி, போட்டோ மார்பிங் என்று பல வகையில் ஆன்லைன் வாயிலாக மோசடி சம்பவங்கள் நடந்து வருகின்றது. மேலும் இது தொடர்பான புகார்கள் கடந்த சில மாதங்களாகவே அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது மின்சார கட்டணத்தை வைத்து தற்பொழுது மோசடி நிகழ்ந்து வருகின்றது.
அதாவது உங்கள் மொபைல்களுக்கு மின் கட்டணம் கட்டவில்லை என்றும் உங்களுடைய மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் குறுஞ்செய்தி வருகின்றது. இந்த குறுஞ்செய்தியை திறந்து பார்த்தால் அதில் ஒரு லிங்க் இருக்கும். இந்த லிங்க்கை நாம் தொட்டு உள்ளே சென்று பார்க்கும் பொழுது நமது வங்கி கணக்கில் உள்ள பணம் அனைத்தும் திருடப்படும்.
இது குறித்து மின்சார வாரியத்திற்கு புகார்கள் வந்தது. இதையடுத்து தமிழக மின்சார வாரியம் எக்ஸ் பக்கத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தமிழக மின்சார வாரியம் இது போன்ற குறுஞ்செய்தி வந்தால் அந்த லிங்க்கை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் அவ்வாறு மெசேஜ் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு…
ஈ.பி பில் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால் கவனம்!
1. பதட்டம் அடைய வேண்டாம்
2. உங்கள் பில் நிலைப்பாடு சரி பார்க்கவும்
3. அந்த எண்ணை தொடர்பு கொள்ள வேண்டாம்
4. இணைய லிங்கக்கை கிளிக் செய்ய வேண்டாம்
5. உடனடியாக 1930 ஐ அழைத்து புகார் அளிக்கவும்
6. உறவினர்கள், நண்பர்களுக்கு தகவலை பகிரவும்
இது ஒரு மோசடி மெசேஜ்! என்று பதிவிட்டுள்ள மின்சார வாரியம் இது குறித்த புகார்களை cybercrime.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளது.