மூல நோய்க்கு நிரந்தர தீர்வு.. இந்த பாட்டி வைத்தியம்!
மலத்தை வெளியேற்றும் பொழுது அதனுடன் இரத்தம் கசிவது மூல நோய்க்கு அறிகுறி ஆகும். ஆசனவாய் பகுதியில் எரிச்சல், வலி ஏற்படுவது மூல நோய்க்கு அறிகுறிகள் ஆகும். இதை குணமாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகளை பின்பற்றவும்.
*கற்றாழை ஜெல்
மூல நோயால் உண்டாகும் வலி, எரிச்சலை குணமாக்க கற்றாழை மடலில் உள்ள ஜெல்லை ஆசனவாய் பகுதியில் தடவி விடலாம்.
*ஐஸ் பேக்
மூல எரிச்சலில் இருந்து விடுபட ஐஸ் கட்டிகளை ஆசனவாய் பகுதியில் ஒத்தடம் கொடுக்கலாம்.
*எலுமிச்சை சாறு
1 கிளாஸ் தண்ணீரில் 1 எலுமிச்சம் பழத்தின் சாறை சேர்த்து அருந்தினால் மூல நோயால் ஆசனவாய் பகுதியில் ஏற்படும் வலி, எரிச்சல் குணமாகும்.
*துத்தி இலை சாறு
மூல நோயை குணமாக்கும் தன்மை துத்தி இலைக்கு உள்ளது. தேவையான அளவு துத்தி இலை எடுத்து அரைத்து சாறு எடுத்து மூல புண்களில் தடவினால் அவை விரைவில் குணமாகி விடும்.
*விளக்கெண்ணெய்
வெந்தயத்தை அரைத்து ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில் கலந்து சாப்பிட்டால் மூலம் குணமாகும்.
*பசலைக்கீரை
ஒரு கப் பசலை கீரையை அரைத்து சாறு எடுத்து குடித்து வந்தால் மூல நோய்க்கு தீர்வு கிடைக்கும்.
*விலாங்கு மீன்
அடிக்கடி விலாங்கு மீன் சாப்பிட்டு வந்தால் மூலம் விரைவில் குணமாகும்.
*பீன்ஸ் + அவரைக்காய்
ஒரு கைப்பிடி அளவு பீன்ஸ் மற்றும் அவரைக்காய் எடுத்து சுத்தம் செய்து அரைத்து ஜூஸாக சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.