பைல்ஸ்? இதை ஒரே நாளில் குணமாக்கும் பாட்டி வைத்தியம்!

Photo of author

By Divya

பைல்ஸ்? இதை ஒரே நாளில் குணமாக்கும் பாட்டி வைத்தியம்!

பைல்ஸ்(மூலம்) பாதிப்பு ஏற்பட முக்கிய காரணம் மலச்சிக்கல் தான். இந்த உலகில் மூல நோயால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த மூல நோயை குணப்படுத்த மருத்துவரை நாடாமல் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தீர்வு காண்பது சிறந்த ஒன்றாக இருக்கும்.

ஆசனவாயில் சிவந்து போதல், ஆசனவாய் வீக்கம், மலம் கழிக்கும் பொழுது எரிச்சல், இரத்த கசிவு ஆகியவை மூல நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.

தீர்வு 01:-

இரண்டு கனிந்த வாழைப்பழத்தை தோல் நீக்கி மசித்து 1 கிளாஸ் அளவு பாலில் போட்டு கொதிக்க வைத்து தினமும் காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாகும்.

தீர்வு 02:-

ஒரு வாழைப்பழம் எடுத்து தோல்நீக்கி இரண்டாக கட் செய்து அதனுள் 1 துண்டு பச்சை கற்பூரத்தை வைத்து சாப்பிட்டால் மூல நோய் புண் விரைவில் ஆறும்.

தீர்வு 03:-

4 உலர் அத்திப்பழத்தை ஒரு கிண்ணத்தில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஊற விடவும். மறுநாள் காலையில் இந்த அத்திப்பழத்தை சாப்பிட்டுஊறவைத்த தண்ணீரை குடித்து வந்தால் மூலம் குணமாகும்.

தீர்வு 04:-

ஒரு மிக்ஸி ஜாரில் 1/2 கப் தயிர், 1/2 கைப்பிடி அளவு துத்தி கீரை, சீரகம் சிறிதளவு சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு கிளாஸுக்கு மாற்றி பருகவும். இவ்வாறு செய்து வந்தால் மூலம் வேரோடு நீங்கும்.