பைல்ஸ்? இதை நிரந்தரமாக குணமாக்க உதவும் நாட்டு வைத்தியம்!

Photo of author

By Divya

பைல்ஸ்? இதை நிரந்தரமாக குணமாக்க உதவும் நாட்டு வைத்தியம்!

பைல்ஸ்(மூலம்) குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும்.

வில்வப்பழம்
நாட்டு சர்க்கரை

ஒரு வில்வ பழத்தை அரைத்து ஜூஸாக்கி கொள்ளவும். இந்த ஜூஸை ஒரு பாத்திரத்தில் போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும்.

அடுத்து ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு நாட்டு சர்க்கரை போட்டு தண்ணீர் ஊற்றி கரைத்து கொதிக்கும் வில்வ பழ சாற்றில் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி குடிக்கவும். இவ்வாறு செய்து வந்தால் பைல்ஸ் நோய் முழுமையாக குணமாகும்.

தயிர்
சீரகம்
சின்ன வெங்காயம்

ஒரு கிண்ணம் தயிரை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு மண் பாத்திரத்திற்கு மாற்றி சிறிது சீரகம் எடுத்து கையில் தேய்த்து போடவும்.

அடுத்து 5 முதல் 6 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் சேர்த்துக் கொள்ளவும். இந்த பானத்தை காலை நேரத்தில் குடித்து வந்தால் பைல்ஸ் முழுமையாக குணமாகும்.

கற்றாழை
சின்ன வெங்காயம்

ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி அதன் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளவும். அடுத்து சின்ன வெங்காயம் 10 எடுத்து தோல் நீக்கிக் கொள்ளவும்.

ஒரு மிக்ஸி ஜாரில் தோல் நீக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கற்றாழை ஜெல்லை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

இதை ஒரு கிளாஸுக்கு ஊற்றி குடித்து வந்தால் பைல்ஸ் நிரந்தரமாக குணமாகும்.