லியோ சக்சஸ் மீட்டுக்கு அனுமதி அளித்த காவல்துறை! ரசிகர்கள் ஹேப்பி!!
லியோ திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்துவதற்கு காவல்துறை சில நிபந்தனைகளை விதித்து அனுமதி அளித்துள்ளது. இதனால் படக்குழுவும், ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் லியோ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் நேரு உள் விளையாட்டு அரங்கில் லியோ திரைப்படத்தின் சக்ஸஸ் மீட் விழாவை நவம்பர் 1ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்தது.
இதையடுத்து சக்சஸ் மீட் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று காவல்துறையிடம் மனு அளித்தது. இதையடுத்து காவல்துறையும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் அளித்த மனு குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று அறிவித்திருந்தது. இதையடுத்து தற்பொழுது லியோ திரைப்படத்தின் சக்சஸ் மீட் நடத்துவதற்கு காவல் துறை சில நிபந்தனைகளை விதித்து அனுமதி கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவை நவம்பர் 1ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்திட காவல்துறை அனுமதி கோடுத்துள்ளது. மேலும் லியோ சக்ஸஸ் மீட் நடத்த வேண்டும் என்றால் ஒரு சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் காவல்துறை கூறியுள்ளது.
லியோ சக்சஸ் மீட் நடத்த காவல்துறையினர் விதித்த விதிமுறைகள்…
* லியோ சக்ஸஸ் மீட் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே பேருந்துகள் வருவதற்கு அனுமதி இல்லை.
* லியோ திரைப்படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி 300 கார்கள் வரை வருவதற்கு மட்டுமே அனுமதி.
* நேரு உள்விளையாட்டு அரங்கில் மொத்தமாக 8000 இருக்கைகள் உள்ளது. அதில் லியோ சக்சஸ் மீட் நிகழ்ச்சிக்கு 6000 இருக்கைகள் ஒதுக்கப்படுகின்றது.
* ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மட்டுமே ரசிகர்கள் அனுமதிக்கப்படுவர். அதற்கு மீறி ஒருவர் கூட அனுமதிக்கப்டமாட்டார்.
லியோ சக்ஸஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் அவர்கள் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில் தவறவிட்ட குட்டி ஸ்டோரியை லியோ சக்ஸஸ் மீட்டில் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் இசை வெளியீட்டு விழாவை தவறவிட்ட ரசிகர்கள் லியோ சக்ஸஸ் மீட் நிகழ்ச்சிக்காக காத்திருக்கின்றனர்.