விவசாய பெருமக்களே.. ரூ.3 லட்சம் வரை கடன் பெற பிரதான் மந்திரி கிசான் கிரெடிட் கார்டுக்கு ஆன்லைனில் அப்ளை பண்ணுங்க!!

0
34
#image_title

விவசாய பெருமக்களே.. ரூ.3 லட்சம் வரை கடன் பெற பிரதான் மந்திரி கிசான் கிரெடிட் கார்டுக்கு ஆன்லைனில் அப்ளை பண்ணுங்க!!

மத்திய அரசு விவசாயிகளுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள கிசான் கிரெடிட் கார்டுக்கு ஆன்லைன் வழியாக அப்ளை செய்ய என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும், இந்த திட்டத்திற்கு எவ்வாறு அப்ளை செய்வது உள்ளிட்ட தகவல்கள் தெளிவாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த திட்டத்தின் மூலம் ரூ.300,000 லட்சம் வரை கடன் பெற முடியும். இந்த கடனுக்கான வட்டி குறைவு என்பதினால் விவசாயிகள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் திட்டங்களில் ஒன்றாக இருக்கிறது.

1)கிசான் கிரெடிட் கார்டின் அம்சங்கள்:

*விவசாயிகள் தங்களின் அறுவடைக்குப் பிந்தைய செலவினங்களுக்காக கடன் வழங்கப்படுகிறது.

*இந்த திட்டத்தின் மூலம் ஒரு விவசாயி ரூ.3 லட்சம் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம்.

*கேசிசி திட்டம் வைத்திருப்பவர்களுக்கு ஊனம், எதிர்பாராத இறப்பு ஏற்பட்டால் ரூ.50 ஆயிரம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது.

*அதேபோல் விபத்து ஏற்பட்டால் ரூ.25,000 வரை காப்பீடு வழங்கப்படுகிறது. ரூ.1,60,000 வரை கடன் பெற ஜாமீன் எதுவும் தேவையில்லை.

2)கிசான் கிரெடிட் கார்டு திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய தகுதியானர்வகள்:

*விவசாய நில உரிமையாளர்

*பங்குதாரர்

*குத்தகை விவசாயி

*சுய உதவிக் குழு உறுப்பினர்

*கூட்டு பொறுப்பு குழு உறுப்பினர்

*ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் மற்றும் கூட்டுக் கடன் வாங்குபவர்கள். குழு உரிமையாளர் பயிரிடுபவராக இருக்க வேண்டும்

3)கிசான் கிரெடிட் கார்டு திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய வயது வரம்பு:

இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய இருக்கும் நபர்களுக்கு 18 முதல் 75 வயதுக்குள் இருக்க வேண்டும்.

குறிப்பு:-

60 வயதுக்கு மேல் இருக்கும் நபர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்க விரும்பினால் அவருக்கு இணை விண்ணப்பதாரர் இருக்க வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்ட்டு இருக்கிறது.

4)கிசான் கார்டு பெற விண்ணப்பத்துடன் என்னென்ன ஆவண நகலை சமர்ப்பிக்க வேண்டும்?

*ஆதார் கார்டு

*ஓட்டர் ஐடி

*ஸ்மார்ட் கார்டு

*டிரைவிங் லைசன்ஸ்

*பாஸ்போர்ட் சைஸ் போட்டோ – 2

*நிலம் தொடர்பான ஆவணங்கள்

*பான் கார்டு

*கிசான் கார்டு வழங்கும் வங்கி கோரும் பாதுகாப்பு பிடிசி போன்ற ஆவணங்கள்

5)கிசான் கிரெடிட் கார்டு வழங்கும் வங்கிகள்:-

*ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

*நாடார்ட் வங்கி

*இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

*ஆக்சிஸ் பாங்க்

*பாங்க் ஆப் இந்தியா

*பஞ்சாப் நேஷனல் வங்கி

*ஐ.டி.பி.ஐ

*எச்.டி.எப்.சி வங்கி

6)விண்ணப்பிக்கும் முறை: மேலே குறிப்பிட்டுள்ள வங்கிகளுக்கு சென்று விண்ணப்பம் செய்யலாம். அல்லது வீட்டில் இருந்தபடி ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்யலாம்.

7)விண்ணப்பம் செய்வது எப்படி?

படி 1: மேலே குறிப்பிட்டுள்ள வங்கிகளில் ஏதேனும் ஒன்றின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு செல்லவும்.

படி 2:

அடுத்து வங்கியின் வெப்சைட்டில் உள்ள KCC படிவத்தை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் போடவும். பிறகு பிழை இல்லமால் KCC படிவத்தை பூர்த்தி இடவும்.

படி 3:

இந்த KCC படிவத்தை அருகில் உள்ள வங்கி கிளையில் உள்ள கடன் வழங்கும் அதிகாரியிடம் சமர்ப்பிக்கவும். அதிகாரி இந்த படிவத்தை முறையாக ஆய்வு செய்து பின்னர் பயன்பாட்டு குறிப்பு எண்ணை வழங்குவார். அதை கண்டிப்பாக சேமித்து வைக்க வேண்டும்.

படி 4:

நீங்கள் அளித்த KCC படிவத்தை சரிபார்த்து கடன் ஒப்புதல் அளிக்கப்படும். இதனை தொடர்ந்து அடுத்த 15 நாட்களுக்குள் கிசான் கிரெடிட் கார்டு தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.