பொங்கல் பரிசுத் தொகுப்பு – அரசாணை வெளியீடு!
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள சுமார் 2.19 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு பரிசு பொருட்களை தமிழக அரசு வழங்கி வருகிறது.
கடந்த ஆண்டு பொங்கலுக்கு ரூ.1000 பொங்கல் பரிசுத் தொகையாக வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் ரொக்கம் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வந்தது.
இதனால் மக்கள் பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருந்தனர். அந்த வகையில் நேற்று பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.
அரசு வெளியிட்ட அரசாணையில் ரேசன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதால் அரசுக்கு ரூ.239 கோடி வரை செலவு ஏற்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
பொங்கல் பண்டிகைக்கு ரொக்கம் வழங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.