பொங்கல் பண்டிகை விடுமுறை நிறைவு! முண்டியடித்து பேருந்தில் இடம் பிடிக்கும் மக்கள்!
தமிழர்களுக்கே உரிய பண்டிகையை பொங்கல் திருநாளிற்கு தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.அதன் காரணமாக வெளியூர்களில் இருபவர்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு செல்ல இருபதினால் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டது.
அந்த பேருந்துகள் சென்னையில் இருந்து முக்கிய இடங்களான திருவண்ணாமலை,சேலம்,புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவு இயக்கப்பட்டது.மேலும் பொங்கல் பண்டிகை என்றால ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம்.அதனால் கடந்த மூன்று நாட்களாக மதுரை அலங்காநல்லூர்,பாலமேடு,அவனியாபுரம் போன்ற இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு மிகவும் புகழ் பெற்றது.
பல்வேறு இடங்களில் பல விதமான விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டது நேற்று பொங்கல் பண்டிகை முடிவடைந்த நிலையில் வேலைக்கு செல்பவர்கள்,விடுதியில் தங்கி படிப்பவர்கள் என அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களில் இருந்து மீண்டும் பணிக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.இதன் கராணமாக ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகின்றனர்.
மேலும் சென்னை, வேலூர், சேலம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் பொதுமக்கள் ஒருவரை ஒருவர் தள்ளி கொண்டும் முண்டியடித்து கொண்டு பேருந்தில் ஏறி இடம் பிடித்து வருகின்றனர்.அதன் காரணமாக பேருந்து நிலையங்களில் பரபரப்பு நிலவி வருகின்றது.