தேய்ந்து போன மூட்டுகளை வலுப்படுத்தும் கிழங்கு!! இதில் சூப் செய்து குடித்தால் ஆட்டு காலை இனி மறந்துடுவீங்க!!

0
306
#image_title

தேய்ந்து போன மூட்டுகளை வலுப்படுத்தும் கிழங்கு!! இதில் சூப் செய்து குடித்தால் ஆட்டு காலை இனி மறந்துடுவீங்க!!

வயது முதுமையில் ஏற்படக் கூடிய மூட்டு வலி,மூட்டு தேய்மானம் முழுமையாக குணமாக முடவன் ஆட்டுக்காலில் சூப் செய்து சாப்பிடுங்கள்.இந்த கிழங்கு ஆட்டுக்காலின் சுவையை ஒத்திருக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)முடவன் ஆட்டுக்கால்
2)உப்பு
3)எண்ணெய்
4)கொத்தமல்லி தழை
5)மஞ்சள் தூள்
6)முருங்கை கீரை
7)பட்டை
8)கிராம்பு
9)மிளகு
10)பூண்டு
11)சீரகம்
12)மிளகாய் தூள்

செய்முறை:-

ஒரு முடவன் ஆட்டுக்கால் கிழங்கை எடுத்து அதன் மேல் பகுதியை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பிறகு உரலில் 1/2 தேக்கரண்டி மிளகு,1 துண்டு பட்டை,2 கிராம்பு,1/2 தேக்கரண்டி சீரகம்,5 பல் தோல் நீக்கிய பூண்டு போட்டு இடித்து எடுத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு குக்கர் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் நறுக்கிய முடவன் ஆட்டுக்கிழங்கை போட்டு வதக்கவும்.அதன் பின்னர் இடித்த பொருட்களை சேர்த்து வதக்கவும்.

பிறகு 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி,மிளகாய் தூள் 1 தேக்கரண்டி,முருங்கை கீரை 1/4 கப் மற்றும் கொத்தமல்லி தழை சிறிதளவு சேர்த்து கலந்து விடவும்.

பின்னர் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி போட்டு 3 முதல் 4 விசில் வரும் வரை வேக விடவும்.இந்த சூப்பை குடித்தால் மூட்டு வலி,மூட்டு தேய்மானம் ஆகியவை முழுமையாக குணமாகும்.