மார்பு சளி குணமாக இந்த ஒரு இலையை பொடி செய்து மூக்கில் வைத்து இழுங்கள்!

0
91
#image_title

மார்பு சளி குணமாக இந்த ஒரு இலையை பொடி செய்து மூக்கில் வைத்து இழுங்கள்!

மார்பு பகுதியில் சளி தேங்கினால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். எனவே சளியை முழுமையாக கரைத்து வெளியேற்ற குப்பைமேனி இலை பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

*குப்பைமேனி

செய்முறை:-

ஒரு கைப்பிடி அளவு குப்பைமேனி இலையை வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி ஒரு டப்பாவில் போட்டு சேமிக்கவும். இந்த குப்பைமேனி இலை பொடியை மூக்கில் வைத்து இழுத்தால் மார்பில் தேங்கி கிடந்த சளி அனைத்தும் கரைந்து மலம் வழியாக வெளியேறி விடும்.

நுரையீரல் சளியை கரைத்து வெளியற்றும் குப்பைமேனி சூரணம்:-

தேவையான பொருட்கள்:-

1)குப்பைமேனி இலை
2)தேன்
3)தண்ணீர்

செய்முறை:-

ஒரு கைப்பிடி அளவு குப்பைமேனி இலையை உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 டம்ளர் தண்ணீர் ஊற்றவும். பிறகு அரைத்து வைத்துள்ள குப்பைமேனி இலை பொடி 1 தேக்கரண்டி அளவு போட்டு கொதிக்க விட்டு வடிகட்டவும். இதில் 1 தேக்கரண்டி தேன் கலந்து குடித்தால் நுரையீரலில் தேங்கி கிடந்த சளி முழுமையாக கரைந்து விடும்.