சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கும் 6 மூலிகைகள் கொண்ட பொடி; தயார் செய்யும் முறை!
உடலில் சுகரை வைத்துக் கொண்டு வாழும் மக்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். சொல்லப்போனால் நம் இந்திய நாடு தான் சர்க்கரை நோய்க்கு தலைமையிடமாக உள்ளது. ஏன் இந்தியர்களுக்கு சர்க்கரை நோய் எளிதில் ஏற்பட்டுகிறது… என்றால் அதற்கு முதல் முக்கிய காரணம் உணவுமுறை பழக்கம் தான் என்று ஆய்வு சொல்கிறது.
மாவு பொருட்கள், சர்க்கரையால் செய்யப்பட்ட பொருட்களை அதிகம் ருசிப்பதால் தான் உடலில் சர்க்கரை நோய் முளைத்து விடுகிறது.
நீங்கள் நல்ல இருக்கீங்களா? என்று கேட்கும் நிலை போய்.. உங்களுக்கு சுகர் இருக்கா? என்று கேட்கும் மோசமான நிலை தோன்றி விட்டது.
சர்க்கரை வருவது சாதாரண ஒன்று தான் என்றாலும் அதை கட்டுக்குள் வைக்க தவறினால் பின்னாளில் சொல்லமுடியாத அனுபவிக்க நேரிடும்.
சர்க்கரை நோய் உள்ள ஒருவருக்கு சிறு காயம் ஏற்பட்டால் கூட அவை குணமாக பல மாதங்கள் தேவைப்படும். சிலருக்கு புண் ஆற வாய்ப்பு ஏதும் இருக்காது. புண் உருவான இடத்தில் உள்ள சதையை வெட்டி எடுக்கும் சூழல் ஏற்படும்.
இந்த சைலன்ட் உயிர்கொல்லி நோயிடம் மிகுந்த எச்சரிக்கை வேண்டும்.. இதற்கு இனிப்பு உள்ளிட்ட சர்க்கரை அளவை உயர்த்தும் பொருட்களை உட்கொள்வதை தவிர்த்து.. உணவு முறையில் கட்டுப்பாட்டை கொண்டு வரவும்.
அதனுடன் இயற்கை மூலிகை பொடியை சாப்பிட்டு வருவது நல்லது.
சுகர் அளவை கட்டுக்குள் வைக்கும் மூலிகை பொடி…
1)சுண்டைக்காய்
2)மருதம்பட்டை
3)நெல்லிக்காய்
4)கருஞ்சீரகம்
5)நாவல் கொட்டை
6)மா பருப்பு
தங்களுக்கு தேவையான அளவு சுண்டைக்காய், நாவல் கொட்டை மற்றும் நெல்லிக்காயை நன்கு காயவைத்து எடுத்துக் கொள்ளவும். இவ்வாறு உலர்த்தி எடுக்கப்பட்டால் தான் பொடி செய்ய ஏதுவாக இருக்கும்.
ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் உலர்த்திய பொருட்களை சேர்க்கவும். பிறகு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய மருதம்பட்டை, மா பருப்பு, கருஞ்சீரகம் ஆகியவற்றை சம அளவில் சேர்த்து பொடியாக்கி கொள்ளவும்.
இந்த பொடியை சுத்தமான, காற்று புகாத டப்பாவில் கொட்டி வைக்கவும்.
பயன்படுத்தும் முறை…
ஒரு கிளாஸ் வெந்நீரில் தயாரித்து வைத்துள்ள மூலிகை பொடி 1 ஸ்பூன் அளவு சேர்த்து கலக்கி குடிக்கவும்.