மார்பில் தேங்கி கிடக்கும் சளியை 5 நிமிடத்தில் கரைத்து வெளியேற்றும் பவர் புல் கசாயம் – தயார் செய்வது எப்படி?

0
43
#image_title

மார்பில் தேங்கி கிடக்கும் சளியை 5 நிமிடத்தில் கரைத்து வெளியேற்றும் பவர் புல் கசாயம் – தயார் செய்வது எப்படி?

இன்றைய காலத்தில் அனைவருக்கும் சளி, இருமல் பாதிப்பு ஏற்படுவது சாதாரணமான ஒன்றாகி விட்டது. சாதாரண சளி ஓரிரு வாரத்தில் குணமாகிவிடும். நெஞ்சு சளி ஏற்பட்டு விட்டால் அவற்றை குணப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இயற்கை முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி இந்த தீராத நெஞ்சு சளியை எளிமையாக குணப்படுத்திவிட முடியும்.

மார்பு சளிக்கான அறிகுறிகள்:-

அதிக சளி, வறட்டு இருமல், தலைபாரம், நெஞ்சு எரிச்சல், தொண்டை எரிச்சல்
சளி அடர் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல், சளியில் ரத்தம் கலந்து வெளியேறுதல்.

மார்பு சளியை கரைத்து வெளியற்றும் அற்புத மூலிகை கசாயம்:-

தேவையான பொருட்கள்:-

*தூதுவளை

*துளசி

*இஞ்சி

*பூண்டு

*மிளகுத் தூள்

*ஜீரா

*மஞ்சள் தூள்

*வெற்றிலை

*ஓமம்

செய்முறை:-

ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். பின்னர் 6 பல் பூண்டை தோல் நீக்கி கொள்ளவும்.

ஒரு உரலில் நறுக்கி வைத்துள்ள இஞ்சி மற்றும் தோல் நீக்கிய பூண்டை சேர்த்து இடித்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடு படுத்தவும். பின்னர் 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 1/2 தேக்கரண்டி சீரகம், 2 தேக்கரண்டி மிளகுத் தூள் மற்றும் 1/4 தேக்கரண்டி ஓமம் சேர்த்து கொதிக்க விடவும்.

பிறகு 2 வெற்றிலையை காம்பு நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். அடுத்து 5 தூதுவளை இலை மற்றும் 1/4 கைப்படி அளவு துளசி இலைகளை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.

அடுத்து இடித்து வைத்துள்ள இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். 4 டம்ளர் தண்ணீர் சுண்டி 2 டம்ளராக வரும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி வெதுவெதுப்பான சூட்டில் பருகவும். இவ்வாறு செய்வதன் மூலம் நாள்பட்ட மார்பு சளி முழுவதும் கரைந்து மூக்கு மற்றும் மலம் வழியாக வெளியேறி விடும்.