சிறைசாலை கைதி திடீர் மரணம்! போலீஸார் விசாரணை !  

0
232
Fainted husband died! The wife complained to the police!
Fainted husband died! The wife complained to the police!

சிறைசாலை கைதி திடீர் மரணம்! போலீஸார் விசாரணை !

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே காரையூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சின்னதுரை(52).இவர் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்து வந்துள்ளார். இந்த தகவல் தெரிந்த போலீஸார் அவர்  வீட்டிற்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது   அவர்  வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்துள்ளதை கண்டுபிடித்தனர். இதைதொடர்ந்து சின்னதுரையை காரையூர் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், சிறைசாலையில் மாலை நேரத்தில் அனைவருக்கும் தின்பண்டம் கொடுப்பார்கள்.நேற்று மாலை சின்னதுரை கடலை சாப்பிட்டுள்ளார். அப்போது சின்னத்துரைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த சிறைக்காவலர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சின்னதுரை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous article அந்த இடத்தில் நயன்தாரா போட்ட டாட்டூ! கணவர் வெளியிட்ட போட்டோவால் உருவான சர்ச்சை!
Next articleவிஷஊசி போட்டு பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த நர்ஸ்!..வெட்ட வெளிச்சமாகிய நாடகம்?