கடலூரில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் பொதுமக்களே உஷார்!!

Photo of author

By CineDesk

கடலூரில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் பொதுமக்களே உஷார்!!

CineDesk

கடலூரில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் பொதுமக்களே உஷார்!!

தமிழகத்தில் தற்போது பல்வேறு பகுதிகளில் டெங்குகாய்ச்சலானது பரவி வருகிறது. சில நாட்களுக்கு முன்பாக சென்னை மதுர வாயிலைச் சேர்ந்த 4 வயது சிறுவன் டெங்குகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து பருவ மழைக் காலம் என்பதால், கடலூரின் சில பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசுவது, மற்றும் பரவலாக மழை பெய்தும் வருகின்றது. மேலாக மழைநீரானது,அதிகம் தேங்கி நின்றதால் அதிலிருந்து ஏராளமான கொசுக்கள் உற்பத்தியாகி டெங்குகாய்ச்சலை ஏற்படுத்திவிட்டது.

இதன் அடிப்படையில் கொசுக்களால் பரவும் வைரஸ் தொற்றான டெங்குகாய்ச்சல், கடலூர் பகுதியைச் சேர்ந்த, வண்டிப்பாளையம், மஞ்சக்குப்பம், நெய்வேலி முட்டம், பண்ருட்டி, ஆகிய பகுதிகளில் வசிக்கும் நான்கு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் என ஆறு பேருக்கு இந்த தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து டெங்குகாய்ச்சலானது உயிரைப் பறிக்கும் தொற்றாகத் திகழ்வதால்,மாவட்ட நிர்வாகம், அப்பகுதியில் பலத்த கட்டுப்பாடுகள்,மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.

பாதிக்கப்பட்ட ஆறு பேரும் தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் தனி வார்டில், அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

டெங்குகாய்ச்சலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் எனப் பொதுமக்கள்,மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.