மளமளவென உயரும் சுகர் லெவலை கண்ட்ரோல் செய்யும் “சுண்டைக்காய் சூரணம்”!!

Photo of author

By Divya

மளமளவென உயரும் சுகர் லெவலை கண்ட்ரோல் செய்யும் “சுண்டைக்காய் சூரணம்”!!

இன்று பிறந்த குழந்தை முதல் முதுமை நபர்கள் வரை அனைவருக்கும் சர்க்கரை நோய் வருவது எளிதான ஒன்றாக மாறிவிட்டது. சர்க்கரை நோய் ஏற்பட்டு விட்டால் அதை கட்டுக்குள் வைத்துக் கொள்ள மாத்திரை எடுக்க வேண்டும். இதனால் மாத்திரை இன்றி வாழ முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

ஆனால் இயற்கை வழியில் தீர்வு வேண்டும் என்று நினைப்பவர்கள் சுண்டைக்காய் சூரணம் பயன்படுத்தலாம். சுண்டைக்காய் கசப்பு தன்மை கொண்டு காய். இதில் அதிகப்படியான நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு சத்து அடங்கி இருக்கு. சுண்டைக்காய் சுகர் லெவலை மற்றும் கன்ட்ரோல் செய்யவதற்கு, வயிற்றுப்புண்ணை ஆற்றுவதற்கு பெரும் உதவியாக இருக்கிறது.

சுண்டைக்காய் சூரணம் தயார் செய்வது எப்படி?

1)சுண்டைக்காய்
2)மோர்

ஒரு கப் அளவு சுண்டைக்காயை காம்பு நீங்கி உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும். இதை மோரில் போட்டு ஒரு நாள் முழுவதும் ஊற விடவும். மறுநாள் இதை ஒரு காட்டன் துணியில் போட்டு நன்கு வற்றல் போல் காயவிட்டு எடுத்துக் கொள்ளவும்.

இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள சுண்டைக்காய் பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து கொதிக்க விட்டு குடித்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்படும்.