சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க இதை நீரில் போட்டு குடித்து வாருங்கள்!!
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகளவு உள்ளது.மதிய நேரத்தில் வீட்டை விட்டு வெளியில் செல்வது என்பது சவாலாக இருக்கிறது.காரணம் கோடை கால வெயில் கொளுத்தி எடுக்கிறது.இந்த வெயிலில் இருந்து தங்கள் உடலை பாதுகாத்துக் கொள்ள இந்த வீட்டு வைத்தியம் தங்களுக்கு உதவும்.
தேவையான பொருட்கள்:-
1)சப்ஜா விதை
2)துளசி
3)புதினா இலை
செய்முறை:-
ஒரு கப் தண்ணீரில் 1/2 தேக்கரண்டி சப்ஜா விதை சேர்த்து ஒரு இரவு ஊற வைக்கவும்.மறுநாள் 10 துளசி இலைகளை தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
அதேபோல் புதினா இலை 5 எடுத்துநீரில் போட்டு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.இந்த இரண்டு இலைகளை மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
இந்த விழுதை ஊறவைத்த சப்ஜா நீரில் போட்டு கலந்து குடிக்கவும்.இவ்வாறு குடித்தால் உடல் சூடு தணிந்து புத்துணர்ச்சி கிடைக்கும்.
மற்றொரு தீர்வு:-
தேவையான பொருட்கள்:-
1)எலுமிச்சை சாறு
2)சியா விதை
3)தேன்
செய்முறை:-
ஒரு கிளாஸ் அளவு நீரில் 1/2 தேக்கரண்டி சியா விதை சேர்த்து 1/2 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.பின்னர் அதில் பாதி எலுமிச்சம் பழத்தின் சாறு மற்றும் 2 தேக்கரண்டி தேன் சேர்த்து கலந்து குடிக்கவும்.இவ்வாறு செய்தால் உடலில் உள்ள சூடு தணியும்.