முடிந்தது காலாண்டு விடுமுறை!!! தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு!!!

0
125
#image_title

முடிந்தது காலாண்டு விடுமுறை!!! தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு!!!

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடப்பட்ட காலாண்டு விடுமுறை நாட்கள் முடிந்து மீண்டும் நாளை(அக்டோபர்3) முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழக மாநில அரசின் கல்வித் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளுக்கும், சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கும் காலாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டது. இதையடுத்து பல்வேறு கட்டங்களாக பள்ளிகள் அனைத்திற்கும் காலாண்டு விடுமுறை விடப்பட்டது.

அதன்படி கடந்த செப்டம்பர் 23ம் தேதி ஒரு சில பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை நாட்கள் விடப்பட்டது. தெரிந்து சில பள்ளிகளுக்கு செப்டம்பர் 27ம் தேதியும் காலாண்டு விடுமுறை நாட்கள் விடப்பட்டது. இந்த காலாண்டு விடுமுறை மிலாடி நபி, காந்தி ஜெயந்தி ஆகிய விடுமுறை நாட்களை மையமாக வைத்து விடப்பட்டது.

காலாண்டு விடுமுறை நாட்களாக தனியார் பள்ளிகளுக்கு 10 நாட்களும் அரசு பள்ளிகளுக்கு 5 நாட்களும் விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து காலாண்டு விடுமுறை நாட்கள் இன்றுடன்(அக்டோபர்2) முடியும் நிலையில் நாளை(அக்டோபர்3) முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

இதையடுத்து நாளை(அக்டோபர்3) முதல் அனைத்து அரசு, மாநகராட்சி, நகராட்சி, அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படவுள்ளது. மேலும் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளும், சி.பி.எஸ்.இ பள்ளிகளும் நாளை(அக்டோபர்3) முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை(அக்டோபர்3) முதல் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நாளை(அக்டோபர்3) வகுப்புகள் தொடங்குககன்றது. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு அக்டோபர் 9ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.

Previous articleசெய்தியாளரிடம் அத்துமீறிய அண்ணாமலை! சர்ச்சையான பத்திரிக்கையாளர் சந்திப்பு!!
Next articleஏலியனுடன் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர் ரஹ்மான்!!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!!