செய்தியாளரிடம் அத்துமீறிய அண்ணாமலை! சர்ச்சையான பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

0
47
#image_title

செய்தியாளரிடம் அத்துமீறிய அண்ணாமலை! சர்ச்சையான பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

தமிழக அரசியலில் அதிமுக – பாஜக கூட்டணி முறிவு குறித்து தான் அனைவரின் மத்தியிலும் பேசப்பட்டு வருகிறது.வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க போவதில்லை என்று அதிமுக திட்டவட்டமாக தெரிவித்தது.இந்த கூட்டணி முறிவுக்கு காரணம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அதிமுக குறித்த சர்ச்சைக்கு பேச்சு தான் என்று சொல்லப்படுகிறது.கூட்டணி முறிவிற்கு பிறகு அதிமுக பல்வேறு அதிரடி காட்டி வருகிறது.

தமிழக அரசியலில் ஏற்பட்டு இருக்கும் பரபரப்புக்கு மத்தியில் பாஜக – அதிமுக கூட்டணி முறிவு மற்றும் என் மண் என் மக்கள் நடைபயணத்தின் நிலவரம் குறித்து மேலிட பாஜகவுக்கு விளக்கம் கொடுப்பதற்காக அண்ணாமலை இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.

முன்னதாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தனது நடைபயணத்தினால் தமிழக மக்களிடையே ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து மேலிட பாஜகவுக்கு விளக்கம் அளிக்க தான் டெல்லி பயணம் மேற்கொள்கிறேன்.ஒவ்வொரு முறையும் நடைபயணம் முடிந்த பின் மேலிட பாஜகவுக்கு விளக்கம் கொடுக்க நான் டெல்லிக்கு செல்வது வழக்கமான ஒன்று தான் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் நான் பதவி ஆசைக் கொண்டவன் கிடையாது.தான் வகித்து வந்த ஐபிஎஸ் ஆபிசர் பதவியை தூக்கி போட்டு வந்தவன் நான்.அதேபோல் தான் கூறிய எந்த ஒரு கருத்தில் இருந்து ஒருபோதும் பின் வாங்கியது கிடையாது.நான் மற்ற அரசியல்வாதிகள் போல் கூறிய கருத்தை மாற்றி பேசியதும் கிடையாது என்று கூறினார்.

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி கொள்ளும் அண்ணாமலை இந்த கோவை விமான நிலையத்திலும் புது சர்ச்சை ஒன்றை ஏற்படுத்தி விட்டார்.கூட்டத்தில் இருந்த பெண் செய்தியாளர் ஒருவர் ஒருவேளை நீங்கள் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? மீண்டும் பாஜகவில் இணைந்து செயல்படுவீர்களா? என்று கேள்வி ஒன்றை முன்வைத்தார்.

இந்நிலையில் அதற்கு அண்ணாமலை செய்த செயல் தான் தற்பொழுது ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளரை தான் நின்று இருந்த இடத்திற்கு அழைத்த அண்ணாமலை இங்கு வந்து அந்த கேள்வியை திரும்ப கேளுங்கள்.இந்த கேள்வியை கேட்ட அறிவாளி யார் என்று மக்கள் தெரிந்து கொள்ளட்டும் என்று கூறியது மற்ற பத்திரிகையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் செய்தியாளர் சந்திப்பில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.இந்நிலையில் பெண் பத்திரிகையாளரிடம் அண்ணாமலை காட்டமாக நடந்து கொண்டார்.கேட்ட கேள்விக்கு முறையான பதில் கூறியிருக்க வேண்டும்.இலலையென்றால் அந்த கேள்விக்கு பதில் கூற மறுத்திருக்க வேண்டும்.அதைவிடுத்து பத்திரிகையாளரிடம் இப்படி நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.