மன்னிப்பு கேட்க மறுத்த ராகுல் காந்தி!! உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு!!

Photo of author

By CineDesk

மன்னிப்பு கேட்க மறுத்த ராகுல் காந்தி!! உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு!!

CineDesk

Rahul Gandhi refused to apologize!! Excitement in the Supreme Court!!

மன்னிப்பு கேட்க மறுத்த ராகுல் காந்தி!! உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு!!

கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் விதமாக இவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதாவது, “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப்பெயர் இருப்பது எப்படி” என்ற இவருடைய பேச்சால் சமூக மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இவ்வாறு ராகுல் பேசியதற்காக குஜராத் முன்னாள் அமைச்சரும், பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோடி இவர் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம் கடந்த மார்ச் 23 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.

 அந்த தீர்ப்பில் ராகுல் காந்தி குற்றவாளி என்றும், இவருக்கு இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 499 மற்றும் 500 யின் கீழ் அதிகபட்ச தண்டனையாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், மேலும் 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

எனவே இந்த வழக்கை குஜராத் உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதற்கான வழக்கு விசாராணையில், “சூரத் நீதிமன்றம் வழங்கிய இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க முடியாது.

அது சரியானது தான் என்றும் இதற்கு எந்த வகையிலும் தடை கோர முடியாது என்றும் கூறி உத்தரவு வெளியானதை அடுத்து ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருக்கின்ற நிலையில், இவரின் சார்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செய்யாத தவறுக்கு ஒருவரை மன்னிப்பு கேட்க வைப்பது தவறாகும்.

இதற்காக குற்றவியல் நடைமுறை மற்றும் மக்கள் பிரதிநிதித்துவம் என்ற சட்டமே உள்ளது. நான் குற்றம் இழைக்கவில்லை. என் மீது தவறு இல்லை எனவே என்னால் மன்னிப்பு கேட்க முடியாது.

அப்படி கேட்க வேண்டும் என்றால் இதற்கு முன்னதாகவே கேட்டிருப்பேன் என்று ராகுல் காந்தி கூறி உள்ளார். இவரின் இந்த பேச்சு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.