உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும் மூலிகை தேநீர்!!

0
63
#image_title

உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும் மூலிகை தேநீர்!!

நம்மில் பலர் டீ அல்லது காபிக்கு அடிமையாக இருப்போம்.இதை குடித்தால் போதும் உணவு கூட வேண்டாம் என்று நம்மில் பலர் பெரும்பாலான நேரங்களில் இதை பசிக்கு உணவாக எடுத்து இருப்போம்.இப்படி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த பானமாக திகழும் இதில் சில நன்மைகள் இருந்தாலும் அதிகளவு தீமைகளும் இருக்கிறது.

டீ பருக வேண்டும் அதே சமயம் அவை ஆரோக்கியமாதாக இருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை பயன்படுத்தி செய்து பாருங்கள் தேநீர் மிகவும் சுவையாகவும்,ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*சுக்கு – சிறு துண்டு

*மிளகு – 10

*கொத்தமல்லி – 1/4 தேக்கரண்டி

*இஞ்சி – சிறு துண்டு

*இலவங்கம் – 1

*துளசி – 10 இலைகள்

*பட்டை – 1(சிறு துண்டு)

*பால் – 2 டம்ளர்

*டீ தூள் – 2 தேக்கரண்டி

*நாட்டு சர்க்கரை – தேவையான அளவு

*கற்பூரவள்ளி – 2 இலை

*ஏலக்காய் – 3

செய்முறை:-

அடுப்பில் டீ பாத்திரம் வைத்து அதில் 2 டம்ளர் தண்ணீர் சேர்க்காத பால் ஊற்றி கொதிக்க விடவும்.பின்னர் அடுப்பை அணைத்து பாலை ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும்.

அதன் பின்னர் மீண்டும் அடுப்பில் டீ போடும் பாத்திரம் வைத்து அதில் ஒரு கப் அளவிற்கு தண்ணீரை ஊற்றவும்.பின்னர் கொத்தமல்லி விதை 1/4 தேக்கரண்டி,10 மிளகு,சுக்கு சிறு துண்டு,10 துளசி இலைகள்,2 கற்பூரவல்லி இலை,ஏலக்காய்,பட்டை சிறு துண்டு,இடித்த இஞ்சி சிறிதளவு சேர்த்து கொதிக்க விடவும்.

பிறகு டீ தூள் 2 தேக்கரண்டி சேர்த்து கொதிக்க வைக்கவும்.மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.பிறகு டீ தூள் நன்கு கொதித்து வந்ததும் 2 டம்ளர் காய்ச்சிய பால் மற்றும் தேவையான அளவு வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி பருகவும்.