Rice water face pack: அரிசி கழுவிய தண்ணீருடன் இதை கலந்து பயன்படுத்தினால் முகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும்!! அனுபவ உண்மை!!
இன்றைய காலத்தில் பெண்கள் தங்களை அழகாக வைத்துக் கொள்ள பல்வேறு வழிகளை கடைபிடித்து வருகின்றனர். முகம் வெள்ளையாக இருந்தால் தான் அழகு என்று எண்ணி பல பெண்கள் இரசாயன பொருட்களை உபயோகித்து வருகின்றனர். இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி தெரியாமல் பலர் இருக்கின்றனர்.
சருமத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் இரசாயன பொருட்களை விட இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து முகத்தை பராமரித்து வந்தால் முகம் அழகாகவும், பொலிவாகவும் இருக்கும். அந்தவகையில் அரிசி தண்ணீரை முகத்தில் பயன்படுத்தினோம் என்றால் முகம் மிருதுவாக இருக்கும். விரைவில் முதுமை தோற்றம் நீங்கும்.
தேவையான பொருட்கள்:-
*அரிசி ஊறவைத்த தண்ணீர் – 4 தேக்கரண்டி
*தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி
செய்முறை:-
ஒரு பவுலில் 2 தேக்கரண்டி அரிசி போட்டுக் கொள்ளவும். பின்னர் அரிசி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் வரை ஊற வைக்கவும். 1 மணி நேரத்திற்கு பிறகு அரிசி ஊற வைத்த தண்ணீரை மற்றும் ஒரு பவுலுக்கு ஊற்றிக் கொள்ளவும்.
அடுத்து சுத்தமான தேங்காய் எண்ணெய் 2 தேக்கரண்டி அளவு எடுத்து அதில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அரிசி தண்ணீர் + தேங்காய் எண்ணெய் நுரைத்து வரும் வரை மிக்ஸி பண்ணவும்.
தயார் செய்து வைத்துள்ள பேஸ் பேக்கை முகத்திற்கு பயன்படுத்துவதற்கு முன்னர் சுத்தமான தண்ணீர் கொண்டு முகத்தை நன்கு கழுவிக் கொள்ளவும். பின்னர் தயார் செய்து வைத்துள்ள அரிசி வாட்டர் பேஸ் பேக்கை முகத்தில் போட்டு அப்ளை செய்யவும். இதை 15 முதல் 20 நிமிடம் வரை முகத்தில் இருக்கும்படி செய்து பின்னர் சுத்தமான தண்ணீர் கொண்டு முகத்தை கழுவிக் கொள்ளவும்.
இந்த பேஸ் பேக்கை வாரத்தில் 3 முதல் 4 முறை முகத்திற்கு பயன்படுத்தி வருவதன் மூலம் முக சுருக்கம், கருவளையம், முகப்பரு நீங்கி முகம் அழகாகவும், பொலிவாகவும் இருக்கும்.