ஜிம்மில் இருந்து கொண்டு வசனம் பேசிய ரோஹித் ஷர்மா!!! என்ன வசனம் தெரியுமா?

Photo of author

By Parthipan K

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் உருவானது. இதன் வீரியம் அதிகம் என்பதால் இதன் தாக்கம் அதிகமாக இருந்துவருகிறது. மேலும் தற்போது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் பல நாடுகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. பொது முடக்கம் காரணமாக னைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் கடந்த மார்ச் மாத இறுதில் இருந்து தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. மேலும் ஐபிஎல் தொடருக்கான தேதியும் தொடர்ந்து தள்ளிக்கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நடைபெரும என்ற சந்தேகமும் எழுந்தது. மேலும் இந்தியாவில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகமாகி வந்ததால் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது.

அதன் படி செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் திருவிழா தொடங்குகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் வீட்டில் இருந்து கொண்டு சமூகவலைதளத்தில் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றன. இந்நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனும் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மா உடற்பயிற்சி நிலையத்தில் உடற்பயிற்சி செய்யும் தனது புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் உங்களை உயர்த்துவதற்கு மட்டுமே தாழ்வாக செல்கிறது என்ற ஒரு வசனத்தையும் குறிப்பிட்டுள்ளார்.