இங்கிலாந்து – பாகிஸ்தான் இரண்டாவது டெஸ்ட் போட்டி மழையால் பாதிப்பு

0
179

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் உருவானது. இதன் வீரியம் அதிகம் என்பதால் இதன் தாக்கம் அதிகமாக இருந்துவருகிறது. மேலும் தற்போது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் பல நாடுகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. பொது முடக்கம் காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் கடந்த மார்ச் மாத இறுதில் இருந்து தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் மூன்று மாத இடைவெளிக்கு பிறகு கடந்த ஜூலை மாதம் முதல் இங்கிலாந்து அணி மீண்டும் விளையாட தொடங்கியது. இதற்கு சம்மதம் தெரிவித்து வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அடுத்ததாக அயர்லாந்து அணி இங்கிலாந்து சென்று மூன்று ஒருநாள் தொடரில் விளையாடியது.

இதன் தொடர்ச்சியாக பாகிஸ்தான் அணி இங்கிலாந்து சென்று தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து இரு அணிக்கும் இடையேயான இரண்டாவது போட்டி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வந்தது. இந்நிலையில் பாகிஸ்தான அணி 85/2 ரன்கள் எடுத்த போது மழை வந்ததால் ஆட்டம் பாதிப்பு அடைந்துள்ளது. மழை நின்ற பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Previous articleB.Sc Nursing,GNM படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்பு!
Next articleஜிம்மில் இருந்து கொண்டு வசனம் பேசிய ரோஹித் ஷர்மா!!! என்ன வசனம் தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here