உடல் எடையை அசால்ட்டாக குறைக்க உதவும் “ரோஜா இதழ் தேநீர்”!! உடனே ட்ரை பண்ணுங்க!!

Photo of author

By Divya

உடல் எடையை அசால்ட்டாக குறைக்க உதவும் “ரோஜா இதழ் தேநீர்”!! உடனே ட்ரை பண்ணுங்க!!

Divya

உடல் எடையை அசால்ட்டாக குறைக்க உதவும் “ரோஜா இதழ் தேநீர்”!! உடனே ட்ரை பண்ணுங்க!!

நம் மனதை கவரும் ரோஜா பூவில் தேநீர் செய்து பருகினால் உடலுக்கு பலவித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.இந்த ரோஜா இதழில் அதிகளவு வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்து இருக்கிறது.இந்த இதழை வைத்து தேநீர் பருகினால் விரைவில் உடல் எடை குறைந்து விடும்.

அதுமட்டும் இன்றி தலைமுடி மற்றும் சருமத்துக்கு பாதிப்பத்திற்கு இந்த ரோஜா இதழ் தேநீர் சிறந்த தீர்வாக இருக்கிறது.அதேபோல் செரிமான பாதிப்பு,மலச்சிக்கல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு தினமும் 1 அல்லது 2 கப் ரோஜாப்பூ இதழ்கள் தேநீர் பருகினால் விரைவில் தீர்வு கிடைக்கும்.சிறுநீரக பாதையில் ஏற்படும் தொற்றை சரி செய்ய ரோஜா இதழ் பெரிதும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்:-

*பன்னீர் ரோஜா இதழ்கள் – 15

*தண்ணீர் – 1கப்

*தேன் – தேவையான அளவு

செய்முறை:-

முதலில் 2 அல்லது 3 பன்னீர் ரோஜாக்களை எடுத்து அதன் இதழ்களை தனியாக பிரித்து கொள்ளவும்.இதை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடவும்.

அடுத்து சுத்தம் செய்து வைத்துள்ள ரோஜா இதழ்களை அதில் சேர்த்து 2 அல்லது 3 நிமிடம் இதழ்களின் நிறம் கொதிக்கும் நீரில் கலக்கும் வரை விட்டு அடுப்பை அணைக்கவும்.

பிறகு இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி அதில் தேவையான அளவு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து கலக்கி பருகவும்.இவ்வாறு தொடர்ந்து பருகி வந்தோம் என்றால் உடல் எடை வரைவில் குறைந்து விடும்.